Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 10, 2016

முதல்வர் ஓபிஎஸ் நடத்தும் முதல் அமைச்சரவை கூட்டம்!


முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை, முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அடுத்த நாள் 6-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.