Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 2, 2016

ஹாஸ்டலில் தங்கும் கேர்ள்ஸ்... இதெல்லாம் கவனிச்சுக்கங்க...!?


கல்லூரி படிக்கும் மாணவிகள் பலர் ஊர்விட்டு நீங்கி, மாநகரங்களில் ஹாஸ்டலில் தஞ்சம் புகுவார்கள். அதற்காக அவர்கள் ஹாஸ்டல் தேடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

* நெட்டில் பார்த்துச் செல்வது, விளம்பரம் பார்த்துச் செல்வது என்றில்லாமல், தங்கவிருக்கும் ஹாஸ்டலுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள உணவு, குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், பாதுகாப்பு, கட்டணம், கட்டுப்பாடுகள் என அனைத்தைப் பற்றியும் விசாரித்து அறிந்துகொள்ளவும். அந்த ஹாஸ்டலில் ஏற்கெனவே தங்கிய அல்லது தங்கியிருக்கும் பெண்களின் பரிந்துரையைக் கேட்டுக்கொள்வதும் நல்லது.

* குளிக்க, சாப்பிட, மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்ய  என அத்தியாவசியத் தேவைகளுக்கு க்யூவில் நிற்கவைக்காத ஹாஸ்டலாகத் தேர்ந்தெடுக்கவும். அட்டாச்டு பாத்ரூம், பாதுகாப்பான ஷெல்ஃபுகள் என வேண்டிய வசதிகள், அம்சங்களை முதலிலேயே செக்செய்து கொள்ளவும்.

* புராஜெக்ட் செய்யவிருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள ஹாஸ்டலாகத் தேர்ந்தெடுப்பது, தெரியாத ஊரில் பஸ் ரூட், பீக் ஹவர் டென்ஷன் உள்ளிட்ட திணறல்களை எல்லாம் அது தவிர்க்கச் செய்யும்.

* உடன் தங்கியிருக்கும் ரூம் மேட்ஸுடன் நல்ல நட்புடன் இருக்கலாம். அதற்காக, அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கு முன் பெர்சனல் விஷயங்களைப் பகிர வேண்டாம். அவர் பெயர், படிக்கும்/பணிபுரியும் நிறுவனம், தொடர்பு எண் ஆகியவற்றை உங்கள் வீட்டினரிடம் தெரிவித்து வைக்கவும். அவசரத்தில் உதவும்.

* ஹோம் சிக் ஆக இருந்தால், புராஜெக்ட்டில் முழுமையான ஈடுபாட்டைக் கொடுக்க முடியாது. எனவே, ஹாஸ்டலில் வேண்டா வெறுப்பாக இல்லாமல், நல்ல புத்தகங்கள், இசை என்று அங்கிருக்கும் நாட்களில் நகராத மணித்துளிகளை பிடித்தவகையில் கழிக்கப் பழகிக்கொள்வது, ஹோம் சிக்கில் இருந்து காப்பாற்றும்.

*  சக பெண்களின் கேலி, கிண்டல், திருட்டு என்று எந்தப் பிரச்னையாக இருந்தாலும், உடன் வார்டனிடம் புகார் அளிக்கவும். அனுசரித்தல் அவசியம், ஆனால் சகிக்கத் தேவையில்லை. தங்கியிருக்கும் ஹாஸ்டல் சூழல் அப்படி இருந்தால், யோசிக்காமல் வேறு ஹாஸ்டல் மாறிவிடவும்.





* அருகில் காவல் நிலையம் எங்குள்ளது என்பதை அறிந்துவைத்திருக்கவும். அதேபோல, ஹாஸ்டலுக்கு அருகில் உள்ள உணவகம், ஏடிஎம், பல் நிலையம், மருத்துவமனை பற்றியும் கேட்டுத் தெரிந்து வைத்துக்கொள்ளவும். பெண்களுக்கு ஆபத்தில் உதவக்கூடிய அவசரத் தொடர்பு எண்களை அலைபேசியில் பதிந்து வைத்துக்கொள்ளவும்.

*  கையிருப்பு பணம் முழுவதையும் ஹாஸ்டலில் வைக்க வேண்டாம். வங்கி அக்கவுன்ட், ஏடிஎம் என்று பணத்தை பாதுகாப்பாகக் கையாளவும். அப்படியே ஹாஸ்டலில் பணம் வைக்க நேரிட்டால், மொத்தத் தொகையையும் ஒரே இடத்தில் வைக்காமல், பிரித்து வைக்கவும்.

* தலைவலி, முதுகுவலி, காய்ச்சல், சளித் தொந்தரவுகள், சானிட்டரி நாப்கின்கள் என்று எப்போதும் மெடிக்கல் கிட் கைவசம் இருக்கட்டும்.

புதிதாக, புதிராக இருக்கும் மாநகரைக் கண்டு அச்சம் வேண்டாம். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் தைரியம்தான் தேவை!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.