பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மானத்தை வைத்து வணங்கி ஆசிபெற்றார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி காலையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கும் விழாவில், பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்கிறார்.
அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக நேற்று (டிசம்பர் 29) நியமிக்கப்பட்டார் சசிகலா. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) மாலை 5.20 மணிக்கு சிவப்பு கலர் புடவை அணிந்த நிலையில், ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில், முன் சீட்டில் அமர்ந்தபடி மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. அவரை அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். சசிகலா, பொதுக்குழு தீர்மானத்தை ஜெயலலிதாவின் காலடிப் பகுதியில் வைத்து வணங்கினார். சிறிது நேரம், மெளனமாக உறுதிமொழி எடுத்துக்கொள்வது போல நின்றுக்கொண்டிருந்தார். பின்னர் ஒரு தடவை ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்து திரும்பவும் வணங்கினார்.

அதன் பின்னர் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்றார். அங்கும் மலர்வளையம் வைத்து வணங்கினார். அதன் பின்னர் பக்கத்தில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்றார். அங்கும் மலர் வளையம் வைத்து வணங்கினார். அப்போது அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் அனைவரும் உடன் சென்றனர். 20 நிமிடங்களில் இந்த மூன்று பேரின் சமாதிக்கும் போய்விட்டு ஜெயலலிதாவின் TN 07 AD 0006 பதிவெண் கொண்ட காரில் போயஸ் கார்டன் கிளம்பிச் சென்றார். சசிகலா வருகையை முன்னிட்டு சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா வருகிறார் என்றால் போயஸ் கார்டனிலிருந்து சம்பவ இடம் வரை அ.தி.மு.க தொண்டர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். அவர் பயணித்துவரும் பகுதிகளில் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் வாகனப் போக்குவரது நிறுத்தப்படும்.
சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தபோது வரவேற்பு ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. ஜெயலலிதா சமாதி பகுதியிலும் தொண்டர்களின் எண்ணிக்கை தள்ளு முள்ளு ஏற்படும் அளவுக்கு இல்லை. புரட்சித் தலைவி என்ற கோஷத்துக்குப் பதிலாக 'சின்னம்மா வாழ்க' என்ற கோஷம் மட்டும் ஒரு சில இடங்களில் ஒலித்தது. சாலைப் போக்குவரத்தும் நிறுத்தம் செய்யப்படவில்லை. இதனால், கார்களும் இருசக்கர வாகனங்களும் வாலாஜா சாலை மற்றும் காமராஜர் சாலையில் சகஜமாக பயணித்தன.

நாளை (டிசம்பர் 31) காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வர இருக்கிறார். அதனால், ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்த அ.தி.மு.க தொண்டர்கள், ராயப்பேட்டை கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்த்தனர். ஒரு சில தொண்டர்கள் தாங்கள் வந்த காரிலேயே போயஸ் கார்டனுக்கும் சென்றனர்.!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.