Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

முதல்வருக்கு தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை: அப்போலோவில் பரபரப்பு


உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.




குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள்  வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.



மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்.

அப்போலோ மருத்துவமனை அறிக்கை





இந்நிலையில் அதிமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், இன்று மாலை 6 மணிக்கு ஈஸ்ரவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்ய, தலைமையிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாம்.

இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.