Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

தூக்குக் கயிற்றில் இருந்து தப்பிக்க ? . தமிழச்சி (Tamizachi)



இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று:...

1. தேசிய நெருக்கடி நிலை.
2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி.
3. நிதி நெருக்கடி நிலை.
தற்போது இந்தியாவில் முதன்முறையாக 'நிதி நெருக்கடி'யை உள்நாட்டு மக்களிடம் மோடி அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
இது 'தேசிய நெருக்கடி'க்கு கொண்டு செல்லும்.
நிதி நெருக்கடியும், தேசிய நெருக்கடியும் உள்நாட்டு கலவரத்தை தூண்டி, அது மாநில அளவில் கலவரத்தின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும். மாநில அமைதி சீர்குலைவு 'ஜனாதிபதி ஆட்சி'யை தூண்டிவிடக்கூடும்.
மத்திய அரசு மாநில சுயாட்சி உரிமை மறுப்பை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடும்.
இந்திய சாசனத்தில் கூறப்பட்டுள்ள 3 நெருக்கடி நிலைகளையும் மோடி தன்னுடைய முட்டாள்தனத்தினால் சந்திக்க வேண்டிய சூழல் 100வது நாளிலோ அல்லது அதற்கு முன்பாகவே கூட சந்திக்க நேரிடலாம்.
"500 / 1000 ரூபாய் தடையின் நெருக்கடி மக்களை 50 நாட்களில் மீட்டுவிடும். இல்லாவிட்டால் என்னை தூக்கிலிடுங்கள்" என்று அழுதார் மோடி.
நாளை 50-வது நாள். இன்னமும் பணத்தட்டுப்பாடு உள்நாட்டில் நீடிக்கிறது. இந்நிலையில் பொருளாதார நிபுணரோடு ஆலோசனை நடத்த ஆரம்பித்திருக்கிறார் மோடி.
"சர்வாதிகாரத்தில் ரத்து அதிகாரம் இல்லை பொறுப்பான சர்க்காரில் ரத்து அதிகாரம் இருக்கிறது. இதுதான் உண்மை. அரசியல் சட்டத்தை புரிந்து கொள்ள விரும்புகிறவர்களும் அரசியல் சட்டங்களை உருவாக்க விரும்புகிறவர்களும் இதை மனதில் கொள்ளட்டும்"
என்று இந்திய சட்ட அரசமைப்பு சாசனத்தை எழுதிய அம்பேத்கர் கூறியதைப் போன்று தன் தவறுகளை திருத்திக் கொள்ளவும், மக்களாட்சி சர்க்காரில் தனது அறிவிப்பை ரத்து செய்யவும் மோடி முயன்றால் நாளை தூக்கில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பை இந்திய மக்கள் கொடுத்துள்ளதாக எண்ணிக் கொள்ளட்டும்.
இல்லாவிட்டால் இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலை மூன்றையும் மோடி தனது ஆட்சியில் சந்திக்கக்கூடும். இதைவிட ஒரு அவமானம் / கையாளாகாத்தனம் மோடிக்கு இருக்குமா?
#தமிழச்சி
27/12/2016
#நிதி_நெருக்கடி #அம்பேத்கர் #அரசியல் #மோடி
#500ரூபாய் #1000ரூபாய் #மக்களாட்சி #ஜனாதிபதி_ஆட்சி #கறுப்புபணம் #பொருளாதாரநெருக்கடி #அரசியல்_விழிப்புணர்ச்சி #ரிசர்வ்_வங்கி #மத்திய_அரசு #பாஜக #இந்திய_நாட்டு_பொருளாதாரம் #500RS #1000RS
#இந்திய_சட்ட_அரசமைப்பு_சாசனம் #BJP #MODI

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.