நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றும் தாமிரபரணி நதி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உற்பத்தியாகும் காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, மாஞ்சோலையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு, குற்றாலத்தில் பிறக்கும் சிற்றாறு ஆகியவை தாமிரபரணியின் முக்கிய கிளை நதிகள். தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை தாமிரபரணியை பிரித்து விட்டு பார்த்து விட முடியாது. இந்த இரு மாவட்ட மக்களின் ஒரே நீராதாரம் தாமிரபரணிதான். தாமிரபரணிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கடக்கும் ஒரே நதியும் கூட. தமிழகத்தில் ஓடும் வேறு எந்த பெரிய நதியும் தமிழகத்தில் உற்பத்தியாவது இல்லை.
தாமிரபரணிக் கரையை ஒட்டி நதிக்கரை நாகரீகம் செழித்து வளர்ந்திருப்பதும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போன நாகரிகத்தின் அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. மக்கள் கூடி வாழ்ந்த நாகரிகம் செறிந்தற்கான அகழ்வுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் 'பொருநை' என அழைக்கப்பட்டத் தாமிரபரணி தமிழர்களின் நாகரீக வளர்ச்சியில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்தது.
தற்போது நெல்லையைத் தாண்டுவதற்கு தாமிரபரணி படாத பாடு பட்டு விடுகிறது. நெல்லை நகரின் கழிவுகள் தாமிரபரணியில்தான் கலக்கின்றன. இதனால், குடிநீர் மாசுப்படுகிறது. இதற்கிடையே பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களும் தாமிரபரணியில் தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. அண்மையில் தாமிரபரணி நதியில் இருந்து குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைத் தடை விதித்தது. இந்த தடை நிரந்தரத் தடையாக வேண்டுமென்பது தென் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு
இதற்கிடையே தாமிரபரணி குறித்த மற்றொரு மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகி இருக்கிறது. வடஇந்தியாவில் பல நதிகளில் படகு போக்குவரத்து இருக்கிறது. அதே போல் நாட்டின் முக்கிய நதிகளில் ஆண்டு முழுவதும் நீர் ஓடும் ஆறுகளில் நீர்வழிப் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றமும் கடந்த மார்ச் மாதத்தில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் நாட்டில் உள்ள 106 ஆறுகள் நீர் வழிபாதை ஏற்படுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் இருந்து தாமிரபரணியும் மணிமுத்தாறுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளள. தாமிரபரணிக்கு தேசிய நீர் போக்குவரத்து 99 என பெயரிடப்பட்டுள்ளது. தாமிரபரணியின் துணை ஆறான மணிமுத்தாற்றுக்கு தேசிய நீர்வழிப் போக்குவரத்து 69 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிகாரிகள் தாமிரபரணி நதியில் நீர்வழிப் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். முதற்கட்டமாக 65 கிலோ மீட்டருக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், தாமிரபரணி கடலில் கடக்கும் இடமான புன்னக்காயலில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வரை நீர் வழிப் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கு சாத்தியக் கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தாமிரபரணி நதியில் கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இங்கே பிரித்தெடுக்கும் கனிம வளங்கள் சாலை மார்க்கமாக தூத்துக்குடி துறைமும் கொண்டு செல்லப்பட்டு மாலத்தீவுக்கு கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன. புன்னக்காயலில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு நீர் வழிப்பாதை உருவாக்கப்படும்பட்சத்தில் படகு மூலமே கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும். முதற்கட்டமாக சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே நீர்வழிப்பாதை ஏற்படுத்தப்படும். வருங்காலத்தில் ஆற்றை ஆழப்படுத்தி பயணிகள் படகு போக்குவரத்து ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. தாமிரபரணியை ஒட்டி புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில், குலசேகரப்பட்டினம், பனியமாதா கோயில் போன்ற புகழ்பெற்ற வழிபாட்டுத்தலங்கள் இருப்பதால், சுற்றுலாத்துறையும் மேம்படும் என நம்பப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.