Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

இலக்கிய சண்டையோட ப்ளூ பிரின்ட் இதுதான் டோலர்களே!


ரஜினி-கமல், விஜய்-அஜித், தனுஷ்-சிம்பு இப்படி நடிகர்கள் ஃபேன்ஸோட சண்டை தொடங்கி அரசியல் சண்டை வரைக்கும் எல்லாத்தையும் விவாத மேடையாக்கி, விடாமல் களமாடுறதுதான் நெட்டீசன்ஸோட வேலையே. ஆனா அப்படிப்பட்ட நெட்டீசன்களுக்கே புரியாத ஒரு விஷயம் இருக்குனா அது இந்த இலக்கியச் சண்டைதான். யார் யாருக்கு சப்போர்ட் பண்றாங்க, எதைப்பற்றி பேசிக்கிறாங்கனு எதுவுமே தெரியாம எல்லோரையும் `நான் இப்போ எங்கே இருக்கேங்கிற` மோட்லயே சுத்த வைக்கிற இந்த இலக்கியச் சண்டையில் அப்படி என்னல்லாம் நடக்குதுனு தெரிஞ்சிக்கணுமா? இதைப் படிங்க. இனிமேலாவது சண்டை போடாம இருங்க ஃப்ரெண்ட்ஸ். ஏன்னா அன்பே சிவம்,  காதலே கடவுள், லவ்வே லார்ட்.


* இலக்கியச் சண்டையில் கண்டிப்பா புரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், போனவாரம் ஒரு தலைப்பை வெச்சு சண்டை போட்டு எதிரியான ரெண்டு பேரு, இந்த வாரம் வேற ஒரு டாபிக் பற்றிப் பேசி அடுத்த நிமிஷமே நண்பேண்டாவா மாறலாம். இது தெரியாம அவங்க ஃபேஸ்புக்ல சண்டை போடுறப்போ நீங்களும் உள்ளே போய் என்டர்டெயின்மென்டைப் பண்ணீங்கனா எதிர்காலத்துல சேதாரம் அதிகமா இருக்கும். அரசியல் மாதிரிதான் ப்ரோ இலக்கியத்துல நீண்டகால நண்பனும் இல்லை. நெடுங்கால எதிரியும் இல்லை.

* ரெண்டுநாள் முன்னாடி சீரியஸா போஸ்ட் மாடர்னிசம் பற்றிப் பேசுன ஓர் இலக்கியவாதி இந்த வாரமே 'நாகினி' சீரியல் பற்றிக்கூட பேசலாம். இலக்கியவாதிகள் பேசுற எல்லாத்துலயும் இலக்கியத்தை எதிர்பார்க்கக் கூடாது. சிலபேர்கிட்ட எப்பவுமே எதிர்பார்க்கக் கூடாது.

* 'மங்காத்தா' படம் விஜய் ஃபேன்ஸுக்கும், 'துப்பாக்கி' படம் அஜித் ஃபேன்ஸுக்கும் எப்படிப் பிடிக்காதோ அதே மாதிரிதான் எப்பவும் புரியாத மாதிரியே எழுதுறவங்களைப் புரிகிற மாதிரி எழுதுறவங்களுக்குப் பிடிக்காது, புரிகிற மாதிரி எழுதுறவங்களைப் புரியாத மாதிரி எழுதுறவங்களுக்குப் பிடிக்காது. எதுனா புரியுதா பாஸ். புரிலையா அதான் ப்ரோ இலக்கியம். இலக்கியவாதிடாவ்வ்.

* சில இலக்கியவாதிகளுக்கு தமிழ்ல வருகிற எந்தப் புத்தகமும் புத்தகமாவே தெரியாது. உலகசினிமா ரசிகர்கள் அடிக்கடி எப்படி அகிராவையும், டொடரண்டினோவையும் எடுத்துக்காட்டா சொல்றாங்களோ அப்படித்தான் இவங்களும் ரஷ்ய இலக்கியத்தையும், வாயிலயே நுழையாத எழுத்தாளர் பெயரையும் சொல்லிச் சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க. அங்கே ரஷ்யாவிலே, எத்தியோப்பியாவிலே.......கிரேக்கத்திலே.

* நம்ம நாட்டுல ஐநூறு, ஆயிரம், கறுப்புப்பணம், நகை அப்படினு தொடர்ச்சியா பிரச்னைகள் நிறைய வந்தாலும் இலக்கியவாதிகள் பிரச்னையே தனிதான். நாக பதனில நடுவுல `ப்` வருமாங்கிற ரேஞ்சுக்கு உள்ள பிரச்னைக்கெல்லாம் நடுராத்திரி வரைக்கும் சண்டை போடுவாங்க. அட்டைப்படத்துக்கெல்லாம் சண்டை வரும்னா பாருங்களேன்.

* இலக்கியவாதிகள் பேசுற இந்தப் பின்நவீனத்துவம்தான் ஃபேஸ்புக்குல முக்கியமான ஃபன்நவீனத்துவமே. இது சம்பந்தமா அவங்க ஏதாவது சண்டை போட்டா என்னதான் பேசிக்கிறாங்கனு அவங்களுக்கும் புரியாது நமக்கும் புரியாது. ஆமா இந்த பின்நவீனத்துவம்னு சொல்றாங்களே அது ஃபிளிப்கார்ட்ல கிடைக்குமா...?

* இலக்கியவாதிகள்கிட்ட இந்தக் குறியீடு படுற கஷ்டம் மாதிரி வேற எதுவும் கஷ்டப்படாது. எதையுமே நேரா சொல்லாம குறீயீட்டு மூலமாவே சொல்றதுதான் இவங்களோட வேலை. இதுல குறியீட்டை வெச்சே சில பேர் சண்டை போடுறதுதான் ரொம்பக் கொடுரமா இருக்கும். நமக்கெல்லாம் சாதாரணமா சண்டை போட்டாலே புரியாது. இப்படிலாம் போட்டா எப்படி ப்ரோ புரியும்.

* சில இலக்கியவாதிகள் சினிமா விமர்சகராகவும் இருப்பாங்க. புரியாத கமல்கூட சில சமயம் புரியற மாதிரி படம் எடுத்தாலும் இவங்கள்லாம் எப்பவுமே அதுக்குப் புரியாத மாதிரிதான் விமர்சனம் பண்ணுவாங்க. இலியானா நடிச்ச படமா இருந்தாலும் இலக்கியத்தைத் தேடுவாங்க. நீங்களே சொல்லுங்க பாஸ். நாங்க எப்பயாவது இலக்கியத்துல சினிமாவைத் தேடி இருக்கோமா?

* இந்தப் புத்தகக் கண்காட்சி நேரத்துல ``கொசுவைக் கொல்லும் நவீன மெஷின்` மாதிரியே புதுசு புதுசா நிறைய புக் எழுதி அதை ப்ரோமோ பண்றேனு இருக்கிற எல்லோரையும் சிலர் டார்ச்சர் பண்ணூவாங்க. இதை வெச்சே நிறையப் பேர் சண்டை போடுறதான் ஹைலைட்டே

என்னதான் தினமும் புரியாத மாதிரியே சண்டை போட்டாலும் நம்ம இலக்கியத்தை வாழ வைக்கிறதே இவங்கதான் ஃபிரெண்ட்ஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.