சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளிக்க வந்த தனது கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விட மாட்டேன் என்று சசிகலா புஷ்பா எம்.பி கடுமையாக எச்சரித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில் இந்தப் பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்தப் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நடராஜன் பெயரை அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் முன்மொழிந்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு குரல்களும் அ.தி.மு.க.வில் ஒலித்து வருகின்றன. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா புஷ்பா எம்.பி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று (28-12-16) அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்காக அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வரப்போவதாக பேச்சு நிலவியது. ஆனால், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகனும் மற்றும் அவரது வழக்கறிஞருமே வந்தனர். இவர்கள், வருவதைக் கண்ட அ.தி.மு.க.வினர் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். இதில் லிங்கேஸ்வர திலகனுக்கு தலை மற்றும் உடம்பில் பலமான அடிகள் விழுந்தன. அவருக்கு மூக்கு உடைப்பட்டு ரத்தம் பீறிட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த லிங்கேஸ்வர திலகனை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

இந்தத் தாக்குதலைப்பற்றி சசிகலா புஷ்பா எம்.பி கூறுகையில், "அ.தி.மு.க. பொதுச்செயலாளராக விருப்ப மனு தாக்கல் செய்ய, என் கணவர் சென்றபோது, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த எனது கணவரை போலீசார் அழைத்து செல்வதை டிவி.யில் பார்த்த நான் அதிர்ந்து போனேன். உடனே எனது வக்கீல் உதவியுடன் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால், எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறிவிட்டனர். எனது கணவரின் உடலுக்கும், உயிருக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக காவல் துறைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நான் சும்மா விடப்போவதில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தேடுக்கப்பட வேண்டிய பொதுச்செயலாளார் பதவியை, குறுக்கு வழியில் கைப்பற்ற நினைக்கிறார் சசிகலா. இந்தப் பிரச்னையை இதோடு நான் விடப்போவதில்லை" என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.