Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

தோனி, கோலியை பின்னுக்கு தள்ளிய பி.வி.சிந்து


இந்தியாவில், விளையாட்டு வீரர்களில் இந்தாண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை யாஹூ வெளியிட்டுள்ளது. இதில் தோனி, கோலியை பின்னுக்கு தள்ளி ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து முதல் இடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஒலிம்பிக்கில் அசத்திய ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை தீபா கர்மாகரும், மூன்றாவது இடத்தில் தோனியும், நான்காவது இடத்தில் கோலியும் உள்ளனர். குறிப்பாக பதக்கம் வென்ற பிறகு சிந்து அதிகம் தேடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக் ஐந்தாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் எட்டாவது இடத்திலும் உள்ளனர். குறிப்பாக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மெஸ்ஸி ஏழாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் இருந்து அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களில், 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே வெளிநாட்டு வீரர் மெஸ்ஸிதான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.