Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 11, 2016

அதிமுக பொதுச் செயலாளர் யார்? பொன்னையன் விளக்கம்


அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு காலமானார். அவரது மறைவை தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என்று பரபரப்பாக கட்சிக்குக்குள் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுக பொதுச் செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலவுகிறது என்பது வதந்தியே என்று கூறினார்.

அரசியல் காரணங்களுக்காக புரளிகள் பரப்பப்படுகின்றன என்றும், தொண்டர்களை காக்கும் ஒருவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும்  அனைவரும் அதிமுகவை இணைந்து காக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவில் வெற்றிடம் எதுவும் உருவாகவில்லை என்று கூறிய பொன்னையன், அதிமுக ஒரு ஆலமரம் என்றும், பாஜக நெருக்கடி தறுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் கூறினார்.

மேலும், அம்மாவுடன் சசிகலா இறுதி வரை வாழ்ந்து வந்தவர் என்று கூறிய பொன்னையன், ஒவ்வொன்றும் கற்பனையான காரணத்தை கூறுவது சரியல்ல என்றும், அதிமுகவின் முக்கிய உறுப்பினர் என்பதால் அமைச்சர்களை சசிகலா சந்திக்கிறார் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.