மும்பையில் பத்மபூஷண் விருது பெற்ற பிரபல டாக்டர் மீது கருப்பு பணத்தை மாற்ற முயன்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
பத்மபூஷண் விருது
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் பிரபல சி.ஐ.ஐ.ஜி.எம்.ஏ. புற்றுநோய் ஆஸ்பத்திரியை நடத்தி வருபவர் டாக்டர் சுரேஷ் தகல்கர். இந்த ஆஸ்பத்திரியில் தற்போது தொடர்புடையவர் டாக்டர் சுரேஷ் அத்வானி. இருவரும் மும்பையில் பிரபல புற்றுநோய் மருத்துவர்கள். இவர்களில் டாக்டர் சுரேஷ் அத்வானி மத்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் வருமான வரி, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகிய பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் கருப்பு பணம் கள்ளத்தனமாக மாற்றப்படுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ரூ.10 கோடி கருப்பு பணம்
கடந்த 15-ந்தேதி மராட்டிய மாநில போலீசார் திலக்நகர் பகுதியில் ஒரு காரில் உரிய அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடியை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள். இதுகுறித்து வருமான வரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ரூ.10 கோடி தொடர்பாக வைத்யநாதன் நகர கூட்டுறவு வங்கியின் 11 கிளைகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அப்போது வங்கியின் 2 கிளை மேலாளர்கள் விபின்ஷா, சிரிஷ் திக்ளே ஆகியோர் பிரபல டாக்டர்கள் சுரேஷ் அத்வானி, சுரேஷ் தகல்கர் ஆகியோருக்கு சொந்தமான அந்த கருப்பு பணத்தை முறை கேடாக வெள்ளையாக மாற்ற முயற்சித்தது தெரியவந்தது.
சி.பி.ஐ. வழக்கு பதிவு
2 வங்கி மேலாளர்களும் கைது செய்யப்பட்டனர். டாக்டர்கள் சுரேஷ் அத்வானி, சுரேஷ் தகல்கள் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தி மராட்டிய மாநில நகர கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.15 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.25 கோடியும் கருப்பு பணம் என்றும், அவற்றை முறைகேடாக வெள்ளையாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்ததும் தெரியவந்தது.
இதற்காக கைதான 2 வங்கி மேலாளர்களும் கள்ளத்தனமாக அவுரங்காபாத் பீட் பகுதியில் இருந்து மும்பை வங்கிக்கு அந்த பணத்தை அனுப்பி இருந்தனர்.
வங்கி இயக்குனர் மறுப்பு
மராட்டிய மாநில மந்திரி பங்கஜா முண்டேவின் சகோதரியும், மராட்டிய மாநில நகர கூட்டுறவு வங்கியின் இயக்குனருமான பிரீதம் முண்டே எம்.பி. காரில் கொண்டு சென்றது கருப்பு பணம் அல்ல, ஒரு வங்கி கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு கொண்டு சென்றது தான் என்றார்.
வைத்யநாத் நகர கூட்டுறவு வங்கி பா.ஜனதா முன்னணி தலைவர் கோபிநாத் முண்டேவால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.