Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

சைலன்டாக 340 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சர்வாதிகாரி


வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  ’கிம் ஜோங்-யுன்’ பதவியேற்று ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சர்வாதிகாரியான கிம், கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர் போனவர். கிம்மின் 5 வருட ஆட்சி காலத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார் என தென் கொரிய தேசிய பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரியாவில் 2011-ம் ஆண்டிலிருந்து 340 பேருக்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் 140 பேர் மூத்த அரசாங்க அதிகாரிகள்.  அதிலும் ஒருவர்  அரசு கூட்டத்தின்போது தூங்கியதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஆபத்தான மனிதர்  என்று கிம் ஜோங்-யுன்னுக்கு பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.