வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சுமார் 10 நாள்கள் தாமதித்து அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கியபோதும், போதுமான மழை இல்லை. இதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் உருவான நடா புயலும் எதிர்பார்த்த அளவு மழையைக் கொடுக்கவில்லை. நடா புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 2-ஆம் தேதி கரையைக் கடந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தென்தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.