மும்பையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தாங்களாக முன்வந்து 2 லட்ச கோடி ரூபாய் அளவுக்கு தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் 4 பேரின் வருமானம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தாமாக முன்வந்து, 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. அப்துல் ரசாக் முகமது சயீத், முகமது ஆரீஃப் அப்துல் ரசாக் சயீத், இவரது மனைவி ருக்ஷானா அப்துல் ரசாக் சயீத், இவரது சகோதரி நூர்ஜஹான் முகமது சயீத் ஆகிய நால்வரும், தாமாக முன்வந்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என்று கூறியுள்ளது.
தாங்கள் வைத்திருக்கும் கருப்பு பணம் குறித்து கணக்கு காண்பித்து வரி மற்றும் தண்டம் பிடித்தம் போக மற்றவை செல்லத்தக்க பணமாக்கிக் கொள்ளும் திட்டம் முடிந்துவிட்டதால், மும்பையின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் வருமானவரி கணக்குத் தாக்கல் நிராகரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. பல்வேறு வழிவகைகளில் கருப்புப் பணத்தை திரட்டி, இவர்கள் கணக்கு காண்பித்திருப்பதாக ஐயம் எழுந்திருப்பதால், 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானவரி கணக்குத் தாக்கல் செய்துள்ள நால்வர் குறித்தும், அவர்களது வருமானம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.