Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 6, 2016

இந்திய அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உருவாகியிருக்கிறது: மோடி இரங்கல்


தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் மோடி, தனது இரங்கலை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

"செல்வி ஜெயலலிதாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார் ஜெயலலிதா.

மக்களுக்காகவே யோசிப்பது, பெண்களுக்காக போராடுவது, ஏழைகளின் நலனுக்காகவே சிந்தித்தது போன்றவை எனக்கு மிகவும் ஊக்கம் அளிததது. இந்த துயரமான சம்பவத்தில், எனது எண்ணங்களும், ஆறுதல்களும், தமிழக மக்களுடன் இருக்கும்.

இந்த பெரும் துயரில் இருந்து அனைவரும் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரை பல சமயங்களில் சந்தித்த தருணங்களை நினைவு கூர்கிறேன். அவரது ஆன்மா  சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் " என ட்விட் செய்து இருக்கிறார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.