Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 5, 2016

அன்று மோடியால் புகழப்பட்டார்... இன்று சிறையில் இருக்கிறார்... ஏன்?


அபினவ் எஸ். வர்மா- இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமாகியுள்ள இந்த 21 வயது இளைஞர், சில மாதங்களுக்கு முன்பும் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தார். இந்த இளைஞர் இரண்டு முறை பிரபலமானதற்கு எதிர் எதிர் காரணங்கள் இருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

அபினவ் எஸ். வர்மா தனது 18-வது வயதில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கும்போது, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கைத்தடி இல்லாமல் நடக்க உதவும் 'லைவ் பிரெயில்' என்ற சாதனத்தைக் கண்டுபிடித்தார். கண்பார்வையற்றவர்கள் இந்த சாதனத்தை விரலில் அணிந்துகொண்டால், அவர்கள் செல்லும் பாதையின் வழிகளையும், தடைகளையும் சுலபமாக கண்டறிய முடியும். ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த 102-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில், பிரதமர் மோடி முன்னிலையில் இந்த சாதனத்தை செயல்படுத்திக் காட்டினார்  அபினவ் எஸ். வர்மா.

இந்த கண்டுபிடிப்பு பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட நிலையில்,  மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதினையும் வர்மா பெற்றார். வர்மாவின் கண்டுபிடிப்பு தற்போது இந்தியா உள்ளிட்ட உலகில் பல நாடுகளில் விற்பனையாகி வந்த நிலையில்,  கள்ளநோட்டு அச்சடித்த விவகாரத்தில் சிக்கி இதுவரை சம்பாதித்த புகழை இழந்துள்ளார் வர்மா.



கறுப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக அதிக மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிய 2000 ரூபாய் நோட்டு அறிமுகமான சில நாட்களிலே ஊருக்கு ஊர் 2000 ரூபாய் நோட்டின் கலர் பிரின்ட்கள் வர ஆரம்பித்தன. இதே போல சண்டிகரில் உள்ள தனது லைவ் பிரெயில் அலுவலகத்தில் வர்மாவும் அவரது சில உறவினர்களும் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாயின் கள்ள நோட்டினை அச்சடித்துள்ளனர்.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களிடம் 30% கமிஷன் பெற்றுக்கொண்டு கள்ள நோட்டுகளை மாற்றிவிடுவது இவர்களின் திட்டமாக இருந்தது. அத்துடன் கள்ள நோட்டுகளை சந்தையில் மாற்றிவிடவும் திட்டமிட்டிருந்தனர். கள்ள நோட்டுகளை தனது ஆடி கார் மூலம் ஏஜென்ட்களுக்கு வர்மா அனுப்பி வைத்துள்ளார். இத்தகவல் போலீஸாருக்கு ரகசியமாகக் கசிந்த நிலையில், கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வர்மா மற்றும் அவரது உறவினர்களையும் கைது செய்துள்ளனர்.

பிரதமர் மோடி ஆப்-ஐ ஹேக் செய்த இளைஞர்...



காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு சில நாட்களே கழிந்த நிலையில், ஜாவேத் கத்ரின் என்ற 22 வயது இளைஞர் பிரதமர் மோடியின் ஆப்-ஐ தான்  ஹேக் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ஆப்பில் உள்ள மின்னஞ்சல் ஐடிகள், மொபைல் நம்பர்கள், மத்திய அமைச்சர்களில் மொபைல் நம்பர்கள் ஆகியவற்றை தன்னால் எடுக்க முடிந்ததாக ஜாவேத் கத்ரின் கூறியுள்ளார்.

தனது நோக்கம் இந்த ஆப்-க்கு சிக்கலை ஏற்படுத்துவது அல்ல, இதில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டவே இதைச் செய்தேன் எனவும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு குறைபாட்டால், இந்த ஆப்-ஐ பயன்படுத்தும் ஏழு மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.