பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டு உரை நிகழ்த்தும்போது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். இதனால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு தீர 50 நாட்கள் ஆகும் என்றும் அதுவரை மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பிரச்சினை தீராத நிலையில் இன்றுடன் அந்த காலக்கெடு முடிகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. ஒருசில ஏடிஎம்களில் பணம் இருந்தாலும் அதை எடுக்க பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதனால் ஏழை, நடுத்தர மக்கள் அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பணத்தட்டுப்பாடு காரணமாக இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோல சிறு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 10 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையை அடைந்துள்ளது. ஊழல் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து, நாடு முழுவதும் வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை மற்றும் வருமான வரி விலக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் மீம் அப்சல் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பண மதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இதுவரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்த நடவடிக்கை பற்றி வரும் சனிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும். வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மக்கள் பணத்துக்கு 18 சதவீதம் வட்ட வழங்க வேண்டும்” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.