நம் பணம் சார்ந்த வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது ஏடிஎம். அதைப் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும், இன்று அனைவரிடமும் நிலவும் பண பற்றாக்குறை பிரச்னையில் மைக்ரோ ஏடிஎம்கள் அதைவிட அதிக பலனை அளித்து வருகிறது.
மைக்ரோ ஏடிஎம்?
ஏடிஎம்-ன் மினி பதிப்பே மைக்ரோ ஏடிஎம். மைக்ரோ ஏடிஎம் என்பது சிறிய பிஓஎஸ் வகை மெஷின். மைக்ரோ ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் டெபாசிட், பணம் பெறுதல் மற்றும் பணம் அனுப்ப முடியும்.
மைக்ரோ ஏடிஎம் ஜிபிஆர்ஸ் வழியாக வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இந்த மைக்ரோ ஏடிஎம்-ல் கைரேகை ஸ்கேனர், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கிறது. இந்த மெஷின்கள் வங்கி பிரதிநிதிகளால் பல்வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல இயலும். இந்த மெஷின்கள் எளிதானது. ஆனால், மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் உள்ளே பணம் எதுவும் வைத்திருக்க மாட்டார்கள். மைக்ரோ ஏடிஎம்-ல் டெபிட் கார்ட் தேய்க்கப்பட்டு, வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். இதற்குரிய பணத்தை வங்கி பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் வழியாக வாடிக்கையாளர்களின் பணம் அல்லது சேவை பெற்று, அவர்களுடைய வங்கி கணக்குகளில் பதிவு செய்வது வங்கி பிரதிநிதிகளின் பொறுப்பு.
மைக்ரோ ஏடிஎம்-ல் என்னென்ன செய்ய முடியும்?
பணம் டெபாசிட் செய்தல்
பணம் எடுத்தல்
பணம் அனுப்புதல்
பணம் கையிருப்பு விசாரணை
சேவை கோரிக்கை ஏற்பு (Service Request acceptance)
வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பு
இ-கேஓய்சி சார்ந்த சேமிப்பு கணக்கு துவக்கம்
மைக்ரோ ஏடிஎம் எப்படி இயங்குகிறது?

சாதாரண ஏடிஎம் மெஷின்களைப் போலவே மைக்ரோ ஏடிஎம் மெஷின்களும் இயங்குகிறது.
முதலில், நீங்கள் சரிபார்ப்பு பணியை (verification process) மேற்கொள்ள வேண்டும். சரிபார்ப்பு செயல்பாட்டில், ஆதார் அட்டை உடன் கைரேகை ஸ்கேனிங் அல்லது உங்களுடைய டெபிட் / கிரெடிட் கார்டு வாயிலாகச் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
சரிபார்ப்பு முடிந்தவுடன் மைக்ரோ ஏடிஎம் பல்வேறு பரிவர்த்தனைகள் விருப்பத்தைக் காண்பிக்கும்.
உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்கான பரிவர்த்தனை நடைபெறும்.
பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்த பின், மைக்ரோ ஏடிஎம் மெஷினில் அதற்குண்டான தகவல் திரையில் காட்டப்படும். அதன்பின் உரிய ரசீது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இறுதியில் உங்களுடைய பரிவர்த்தனை பற்றி உங்கள் வங்கியில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் போனுக்கு கிடைக்கப்பெறும்.
இந்த ஏடிஎம் அனைத்து வங்கிகளுக்கும் பரிவர்த்தனை வசதி அளிக்கப்படுகிறது. எனினும், உங்களுடைய வங்கி கணக்கில், உங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
நன்மைகள் என்ன?
மைக்ரோ ஏடிஎம் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் வங்கி சேவைகளை நீடிக்க முடியும்.
தற்போதைய ஏடிஎம் மெஷின்களை விட இதற்கான செலவு மிகவும் குறைவு.
மைக்ரோ ஏடிஎம் ஒரு சிறிய சாதனம் என்பதால் எளிதில் கையலாளம். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
பயோமெட்ரிக் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதால் பாதுகாப்பான முறையில் பரிமாற்றங்கள் நடைபெறுகிறது.
மைக்ரோ ஏடிஎம் மெஷினில் எந்த வங்கி டெபிட்/ கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம்.
முக்கியமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு போன்ற இதுபோன்ற சமயங்களில் இந்த மைக்ரோ ஏடிஎம்கள் பொதுமக்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தன.
கிராமப்புற பகுதியில் நிதி பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மைக்ரோ ஏடிஎம் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இன்று கடும் பண பற்றாக்குறை பிரச்னை நிலவும் சூழ்நிலையில் இந்த வகையான மைக்ரோ ஏடிஎம் மெஷின்கள் ஒரு வரப்பிரசாதமே.
2 லட்சம் மைக்ரோ ஏடிஎம்கள்..!
மத்திய அரசு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மைக்ரோ ஏடிஎம்களை அமைக்க வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் 90,000 ஏடிஎம்கள் நகர்புறங்களிலும் 1.1 லட்சம் ஏடிஎம்கள் கிராம பகுதிகளிலும் அமைக்கப்பட இருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.