Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 8, 2016

'வாக்குவாதம் செய்தால் இனி ரெட் கார்ட்'.... கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அமல்படுத்த பரிந்துரை


கால்பந்து, ஹாக்கி விளையாட்டுக்களைப் போன்று, கிரிக்கெட்டிலும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு இனி ரெட் கார்ட் காட்டும் முறையை நடைமுறைப்படுத்த எம்.சி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது.

போட்டியின்போது எதிரணி வீரர் மற்றும் நடுவரை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவோரை, ரெட் கார்ட் காட்டி வெளியேற்றலாம் என ரிக்கி பாண்டிங், ரமீஸ் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் புதிய விதி, நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. சிறிய அளவிலான குற்றத்தில் ஈடுபட்டால், ரன்களை குறைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கவும் எம்.சி.சி. குழு கூறியுள்ளது. மும்பையில் 2 நாட்கள் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எம்.சி.சி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.