Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 5, 2016

மகள் மேக்ஸின் முதல் பிறந்தநாள்... ஆனந்த யாழை மீட்டும் மார்க் ஸக்கர்பெர்க்!


"ஒரு வருடத்திற்கு முன்னால் நானும், என் மனைவியும் எங்கள் மகள் மேக்ஸ் பிறந்த நாள் அன்று இந்த உலகத்தைப் பற்றி அவளுக்கு ஒரு கடிதம் எழுதினோம். அதன் பின் சான் ஸக்கர்பெர்க் இனிஷியேட்டிவ் மூலம் உலகில் உள்ள குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்தோம்" - இப்படித்தான் தனது மகளின் முதலாவது பிறந்தநாள் வாழ்த்தை ஆரம்பித்துள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறியிருப்பது ''இன்று மேக்ஸ் சிரித்தாள், சில வார்த்தைகள் பேசினாள், தன் கால்களால் முதல் அடியை எடுத்து வைத்தாள்.  மேக்ஸைப் போலவே சான் ஸக்கர்பெர்க் இனிஷியேட்டிவும் வளர்ந்து வருகிறது.

கல்வி என்ற விஷயத்தை முக்கியமாக கருதுகிறோம். 100 பள்ளிகளில் 20000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். வழக்கத்தை விட அவர்களது கற்றல் 50% இந்த முயற்சியால் அதிகரிக்கும். பிரிசில்லா குழந்தைகளின் கல்வியையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்கும் பள்ளிகளைத் திறந்துவைத்துள்ளார். இந்தியாவிலும், நைஜீரியாவிலும் கோடிக்கணக்காணோரை கல்வி மற்றும் தொழில்நுட்பம் மூலம் உலகத்துடன் இணைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.



நோயற்ற உலகை மேக்ஸுக்காக உருவாக்குவோம் என்று கூறியிருந்தோம். இதற்காக நிறைய முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை நோயற்ற உலகை உருவாக்க முதலீடு செய்துள்ளோம். 600 மில்லியன் டாலர் செலவில் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் ஒரு பயோ - ஹப்பை அமைக்கவுள்ளோம்.

தொழில்நுட்பம் உலகின் மிகச்சிறந்த சமூக சேவையாக இதனைப் பார்க்கிறோம். உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப டீமை உருவாக்கி ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்களை மேம்படுத்தவுள்ளோம். எங்களது நிறுவனத்தின் இன்ஜினீயர்களை சிறிய நிறுவனங்களில் இருந்தும், ஸ்டார்ட் அப்களில் இருந்தும், மேலும் சில இடங்களில் இருந்து வேலைக்கு அமர்த்தவுள்ளோம்.

மேக்ஸுக்கு எழுதிய கடிதத்தை படித்தோம். அதில் இருந்து இவ்வளவு தூரம் நாங்கள் கூறிய விஷயங்களை ஆரம்பித்துள்ளோம், இன்னும் இலக்கை அடைய எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் யோசித்து வருகிறோம். நிச்சயம் இலக்கை அடைவோம்.

இந்த ஒரு வருட பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமது குழந்தைகளுக்காக சிறந்த உலகை உருவாக்குவோம்" என்று கூறியுள்ளார் மார்க் ஸக்கர்பெர்க். இந்த ஒரு வருடத்தில் மார்க் தனது மகளைப் பற்றி அழகான, கவித்துவமான பல பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.