மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் மதனை விசாரணைக்காக மேலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீஸார், மதனை அவர் பதுங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இரு மாதங்களாக அவர் அந்த வீட்டில் தங்கி இருந்ததும், அங்கு முக்கிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன் கடந்த மே 27-ம் தேதி மாயமானார். 123 மாணவர்களிடம் ரூ.84.24 கோடி மோசடி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை தேடி வந்தனர். 179 நாட்களுக்கு பின்னர் கடந்த 21-ம் தேதி திருப்பூரில் மதன் கைதானார். வர்ஷா எனும் தோழியின் வீட்டில் பதுங்கியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதன், 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். மதனுடன் நெருக்கமாக இருந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விசாரிக்கப்பட்டனர். மேலும் பலருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக் வேந்தர் பச்சமுத்துவிடமும் விசாரணை நடந்தது.
இந்நிலையில் மதனின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், மேலும் இரண்டு நாட்கள் மதனிடம் விசாரணை நடத்த அனுமதி கோரினர். இந்த மோசடி வழக்கில் மேலும் பலரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்காக கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இதையடுத்து மதனை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மதன் பதுங்கியிருந்த திருப்பூர் வீட்டில் போலீஸார் விசாரணை நடத்தினர். இன்று மதியம் திருப்பூரில் உள்ள மதனின் தோழி வர்ஷா வீட்டுக்குச் சென்ற மதனை அழைத்துச் சென்ற போலீஸார், மதன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, மதன் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த சில ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மதன் அந்த வீட்டில் சுமார் 2 மாதங்களுக்கு மேல் தங்கி இருந்ததாகவும், வர்ஷா வீட்டின் பின்புறம் உள்ள வீட்டில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த வீட்டில் யாருமில்லாம காலியாகத் தான் இருக்கிறது. இரு மாதம் முன்பு வீட்டுக்கு மெத்தை போன்ற சில பொருட்கள் ஆட்டோவில் கொண்டு வரப்பட்டன. தீபாவளி பண்டிகையின்போது மதன் இந்த வீட்டில் தான் இருந்துள்ளார். வழக்கமாக கொண்டாடுவதை விட வர்ஷா வீட்டில் தீபாவளியை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் மதன் பங்கேற்றாரா என்பது தெரியவில்லை," என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அதை சாட்சியமாக போலீஸார் பதிவு செய்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.