நாடெங்கும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கேரளா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அதூர் பிரகாஸ் மகனின் திருமணம் இன்று கேரளாவில் விமர்சையாக நடைபெற உள்ளது.
கேரளா மாநிலத்தின் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சரான அதூர் பிரகாஸின் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கும் கேரள தொழிலதிபர் பிஜு ரமேஷ் மகள் மேகா ரமேஷுக்கும் இன்று திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண மண்டபத்துக்காக அக்ஷர்தம் கோயில் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நுழைவு வாயில் மைசூர் அரண்மனை போல் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்காக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சாமானிய மக்கள் வங்கிகளின் வாசலில் காத்திருக்கும் இந்த சூழலில் ஆடம்பர செலவுக்கு பணம் ஏது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. இதற்கு பதிலளித்துள்ள மணமகளின் தந்தை பிஜு ரமேஷ், திருமணத்துக்காக செலவு செய்யப்படும் பணம் கறுப்புப்பணம் இல்லை என்றும், தன்னுடைய பல வணிக நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருமானத்தை வங்கிகளில் செலுத்தாமல் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தாகவும் தெரிவித்தார். மேலும் தனது தொழில் நண்பர்களிடம் இருந்து திருமணத்துக்காக கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருமண நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்திய மற்றும் சைனீஸ் உணவுகள் உள்பட 100 வகையான உணவுகள் விருந்தினர்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் அண்மையில் ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது, கேரளாவிலும் அதுபோன்ற ஒரு திருமணம் நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.