போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெயலலிதா முழு உருவசிலை இன்று டெம்போவில் கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலை கார்டனில் வைக்கப்படுமா அல்லது வேறு இடத்தில் வைக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் தினந்தோறும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரியில் முதன் முறையாக ஜெயலலிதா சிலை நிறுவப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதா சிலையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிலை போயஸ் கார்டன் இல்லத்துக்கு இன்று காலை டெம்போ ஒன்றில் கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலை கார்டனில் வைக்கப்படுகிறதா அல்லது கட்சித் தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறதா என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.