மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், எம்.ஜி.ஆர் சமாதி அருகே 60 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சந்தனப்பேழையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரைப் போல வைரகற்கள் பதித்த வாட்சுடன் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக போயஸ்கார்டனிலிருந்து இன்று காலை ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. மாலை 4.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உடல், ராணுவ பீரங்கி வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் அண்ணாசாலை, வாலாஜாசாலை வழியாக எம்.ஜி.ஆர் சமாதியை அடைந்தது. அந்த வாகனத்தில் முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம், சசிகலா, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், டாக்டர் சிவகுமாரின் மனைவி உள்பட 5 பேர் அமர்ந்திருந்தனர்.
எம்.ஜி.ஆர் சமாதி அருகே இறுதி ஊர்வலம் வந்தபோது முதல் அமைச்சர் அகிலேஷ்யாதவ்வும் ஏறிக் கொண்டார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதையடுத்து ஜெயலலிதாவின் உடல், சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது. அந்த பேழையில் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா என்ற வாசகம் தமிழ், ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
60 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மாலை 6.06 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வாட்சுடன் சேர்த்து எம்.ஜி.ஆரின் உடல் புதைக்கப்பட்டது போல ஜெயலலிதாவுடன் அவர் அணிந்திருக்கும் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வாட்ச், கிரீன் எம்ரால்டு மோதிரம், தங்க வளையல் ஆகியவற்றுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா அணியும் ஃப்ராங் முல்லர், கேலட் என்ற அந்த வாட்ச்சின் விலை பல லட்சம் என்கிறார்கள். விலை உயர்ந்த அந்த வாட்சை அவர் வாங்கும்போது தன்னுடைய தோழியான சசிகலாவுக்கும் சேர்த்தே வாங்குவாராம். இறுதி அஞ்சலியில் ஜெயலலிதாவைப் பிரிந்த துக்கத்தில் கவலை தொய்ந்த முகத்தில் சசிகலா நின்று கொண்டு இருந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.