Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

இந்தியாவுக்கு போக வேண்டாம்: இஸ்ரேல் எச்சரிக்கை


இந்தியாவில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேல் நாடு எச்சரித்துள்ளது.


இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுற்றிபார்க்க வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அதிகமானோர் இந்தியா வருவார்கள்.


இந்நிலையில் இந்தியாவுக்கு இஸ்ரேல் நாட்டினர் சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும் இந்தியாவில் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.


குறிப்பாக இந்தியாவின் தென்மேற்கு பகுதிகளில் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இந்தியாவில் உள்ள இஸ்ரேல் நாட்டினர் மால், மார்க்கெட், பீச் உள்ளிட்ட பகுதிகளில் நடமாட வேண்டாம் என்றும், இஸ்ரேலில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு செல்லவேண்டாம் என்றும் இந்தியாவில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுக்கும் இதனை அறிவுறுத்துமாறு அந்நாட்டின் பிரதம மந்திரி அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தாக்கப்படுவதற்கான  காரணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.