Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 15, 2016

flipkart இல் ரூ. 12000 மொபைல் ஆர்டர் செய்தார்! பணம் இல்லை, டெலிவரி பையன் கொலை – மொபைல் பறிப்பு!



பிலிப்கார்ட் இணையதளத்தில் ஆர்டர் செய்த மொபைல் போனை வாங்க பணம் இல்லாததால் டெலிவரி பையனை இளைஞர் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருண் என்ற உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்  பிலிப்கார்ட் இணையதளத்தில் RedMI Note 3 செல்போனை ஆர்டர் செய்துள்ளார். அந்த உடற்பயிற்சி நிலையத்தில் அனைவரும் இந்த போனை வைத்துள்ளனர். ஆனால் இவரிடம் மட்டும் இல்லை. இதனால் அந்த செல்போனை வாங்க தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர் தரவில்லை. அதே நேரம் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டார். உடற்பயிற்சி நிலையத்தின் முகவரியை அளித்துள்ளார். இதனையடுத்து நஞ்சுண்டஸ்வாமி என்ற டெலிவரி பையன் அந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட ஜிம்மிற்கு போய் உள்ளார்.
மொபைல் போனை ஆர்வமுடன் வாங்கிய வருண் குமார்  பணம் தருவதாக கூறி ஒரு அறைக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நஞ்சுண்டசாமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்துள்ளார். நஞ்சுண்ட சாமி வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த கொலை அம்பலத்திற்கு வந்தது. அந்த செல்போனின் விலை 12 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிலிப்கார்ட் நிறுவனம் கொலை செய்யப்பட்ட நபர் நேரடியாக தனது ஊழியர் இல்லை என்றும் டெலிவரி செய்யும் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர் என்றும்  கூறியுள்ளது. அதே நேரம் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்லும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை அரசும், தனியார் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.