Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

படிக்காத மேதை


நான் காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்க எனக்கு முன் ஒரு பெண்  வாங்கி கொண்டிருந்தார்....

சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....

கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...

பெண்  வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...

கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிங்க?.....

உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்...

பெண்  நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்...

இந்த கருமத்தால(பாலிதீன்) வீடு குப்பையாச்சி... ஊரு குப்பையாச்சி... நாடு குப்பையாச்சி... இந்த உலகமே குப்பையாச்சி... மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது...

எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது...

துணி பை இலவசமா கிடைக்குது.. பாவிக்க(பயன்படுத்த) சுலபமா இருக்கு... அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும்.... இந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பாவிச்சிட்டு இனி முடியாத என்ற நிலை வரும்போது தூக்கி குப்பைல போட்டுருவேன்.... இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்...

பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்படுத்துவதில் என்ன வெக்கம் ம்?...(முனுமுனுத்து கொண்டே சென்றார்...)
சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி....
படித்தவர்கள்..... பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள்.... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள்... அனைத்து மொழி செய்திதாளையும் தினந்தோறும் தவராமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்....

இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க..... எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....

பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே... சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது....

5 நிமிடத்திற்கு முன் சாதாரண பெண்ணாக  தெரிந்த அவர்...

5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்..

நாமும் இதை பின்பற்ற முயலலாமே 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.