அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துவிட்டது. ' இணையத்தளங்களிலோ பொதுவெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்' என தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வானகரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. 'என்ன நடக்கப் போகிறது' என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் போட்டியிட விண்ணப்பம் கேட்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இன்று காலை பொதுக்குழு நடக்கும் இடத்தில் தகராறு நடந்துவிடாத அளவுக்குக் கட்சியின் சீனியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வந்தனர். எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர். பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியான நேரத்தில், தி.மு.க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசினார் அறிவாலய நிர்வாகி ஒருவர். அவர்களிடம், " அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்றுகூடி தலைமைப் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்துள்ளனர். இது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். உடனே, 'இவர் எல்லாம் பொதுச் செயலாளர் ஆகலாமா' என பொதுவெளியில் யாரும் பேசிக் கொள்ள வேண்டாம். இணையத்தளத்தில் கருத்துப் படங்கள் பதிவிடும்போதும் அவரைத் தாக்கும்விதமாக எதையும் செய்ய வேண்டாம். பதிலுக்கு அவர்கள் தரப்பில் இருந்து எதிர்வினைகள் கிளம்பினால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
" கழக உடன்பிறப்புகளிடம் இவ்வாறு சொல்வதற்குக் காரணம், சசிகலாவை விமர்சிக்கும்போது, 'உங்கள் தளபதி செயல் தலைவர் ஆகலாமா' என இணையத்தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு அ.தி.மு.கவினர் மீம்ஸ் வெளியிடுவதற்கு வாய்ப்பு அதிகம். எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடும் நேரத்தில் எதற்காக இப்படியொரு விமர்சனத்திற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என நினைக்கிறோம். தவிர, தற்போதைய அரசியல் களத்தில் ஸ்டாலினுக்கு நேரடியான அரசியல் போட்டி என்று சொல்வதற்கு யாரும் இல்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரை எதிர்த்துப் பேசியே அரசியல் செய்து வந்தார் கலைஞர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்து வந்தார். அவர்கள் இருவருக்கும் இருந்த வாக்கு வங்கி, எங்கள் பக்கம் திரும்பியதில்லை. இனி வரக் கூடிய தேர்தல்களில், ' அப்போலோ மருத்துவமனையில் நடந்தது பற்றி நீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது. நாங்கள் கேட்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் மன்னார்குடிக்காரர்கள்' எனப் பிரசாரம் செய்வோம். சசிகலாவின் வருகையை அ.தி.மு.கவின் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களிடம் மன்னார்குடி உறவுகளின் செயல்பாடுகளை முன்வைத்தாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை. எனவே, எங்களுக்கான வேலையை அ.தி.மு.க நிர்வாகிகள் எளிதாக்கிவிட்டார்கள். ' தேர்தல் காலங்களில் பார்த்துக் கொள்வோம். அதுவரையில் அமைதியாக இருப்போம்' என நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர்.
' சசிகலாவை பொதுச் செயலாளராக நியமிப்பதுதான், தி.மு.கவுக்கு நல்லது' என்ற கருத்து உடன்பிறப்புகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. " இதுவரையில், சசிகலா எப்படிப் பேசுவார் என்பதுகூட அ.தி.மு.க தொண்டர்களுக்குத் தெரியாது. பொதுச் செயலாளராக பதவியேற்கும்போது, அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு உரை நிகழ்த்துவார் சசிகலா. அவரை குறைத்து மதிப்பிடுபவர்கள் ஏமாந்து போவார்கள். 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் அவருக்கு உண்டு" என வரிந்துகட்டுகிறார்கள் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.