Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 8, 2016

இந்த காரணத்தால் கருணாநிதியை பார்க்க வர வேண்டாம்: திமுக வேண்டுகோள்


நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நேற்றிரவு டிஸ்சார்ஜ் ஆனார் கருணாநிதி. "நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க கருணாநிதி மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடு இருக்க வேண்டும்'' என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக தலைமைக்கழகம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில்  கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று,  நேற்றையதினம் (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும், தலைவர் கலைஞர் மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள  வேண்டுமென்றும், அதுவரை “நோய்த்தொற்று”க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே கலைஞரைப் பார்க்க நேரில் வருவதைத் தவிர்த்து கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும்  ஒத்துழைக்க வேண்டுமென்று  அன்புகூர்ந்து  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.