Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி


தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.40 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாக கருணாநிதி பேசுவதற்கு சிரமப்பட்டார். இதனால், ஸ்கேன் எடுக்கச் சொல்லியுள்ளார்களாம்.

மேலும், கருணாநிதி கடந்த சில வாரங்களாக தட்டம்மையால் அவதிப்பட்டாராம். நேற்று இரவில் இருந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள் பொன்முடி, ஸ்டாலின் மனைவி துர்கா, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இப்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பாராம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.