அண்ணா தி.மு.கவின் ஆறாவது பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் வி.கே.சசிகலா. 'கட்சிப் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தாலும் ஆட்சி அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்விதான் தலைமைக் கழகத்தில் வலம் வருகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 1972 அக்டோபர் மாதம் அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அ.தி.மு.கவின் முதல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றவர், ஜூன் 1978-ம் ஆண்டு வரையில் இருந்தார். அதன்பிறகு, நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் உள்ளிட்டவர்கள் பொதுச் செயலாளராக பதவி வகித்தனர். திருக்கழுகுன்றம் கூட்டத்துக்குப் பிறகு, 'கட்சித் தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார்' என அறிவித்தார் எம்.ஜி.ஆர். பின்னர், 1986-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர், மரணமடையும் வரையில் பதவி வகித்தார். அ.தி.மு.க இரண்டாக உடைந்த பிறகு, 1988-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் ஜெயலலிதா. இதை ஏற்காத ஜானகி அணியினர், ராகவானந்தத்தை நியமித்தனர். 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கட்சியின் முழுக் கட்டுப்பாடும் ஜெயலலிதா வசம் வந்தது. நீண்டகாலம் பொதுச் செயலாளராக இருந்த பெருமையும் ஜெயலலிதாவையே சாரும். தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை தேர்வு செய்துள்ளனர் கட்சி நிர்வாகிகள்.
"தலைமைக் கழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 'ஆட்சி அதிகாரத்திற்குள் சசிகலா வர வேண்டும்' என்பதில் மன்னார்குடி உறவுகள் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கேற்ப, எதிர்ப்பாளர்களை வளைக்க மூன்று வகையான தந்திரங்களை கையாண்டனர். பணம், பாசம், அடிதடி என மூன்று வியூகங்கள் மூலம் எதிர்ப்பாளர்களை வளைத்தனர். 'சசிகலாவால் ஓரம்கட்டப்பட்டவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு' என்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. சசிகலாவின் கணவர் நடராஜன் வகுத்துக் கொடுத்த திட்டங்களின்படி அனைத்தும் சுலபமாகிவிட்டன" என விவரித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், "இன்று சசிகலா பதவியேற்க வருவதையொட்டி, 'புரட்சித் தலைவி வழியில் புதுமைத் தலைவி' எனப் பெயரிட்டு விளம்பரம் கொடுத்திருக்கிறார் கட்சியின் பொருளாளரும் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம். அப்படியானால், அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்கு சம்மதித்துவிட்டாரா என்ற கேள்விதான் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 'முதலமைச்சராக இல்லாவிட்டால், ரெய்டு வரலாம் என்பதற்காகத்தான் இதுநாள் வரையில் அவர் அமைதியாக இருந்தார். மற்றபடி அதிகாரத்தில் தொடரும் எண்ணம் இல்லை' என மன்னார்குடி சீனியரிடம் விளக்கப்பட, 'அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' என உறுதிமொழி கொடுத்த பிறகே, பொதுக்குழுவுக்குக் கிளம்பினார் ஓ.பி.எஸ்" என்றார்.

"சசிகலாவின் ஜாதகத்தை மன்னார்குடி உறவுகள் முழுமையாக அலசி வருகின்றனர். ' ஜனவரிக்குள் பதவியேற்காவிட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்கு ராஜயோக பிராப்தி வருவதற்கு வாய்ப்பில்லை' என சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு வேறு ஒருவரை பதவியில் அமர்த்தும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. 'தங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்' எனக் கொதித்தவர்கள், இன்னொருவரை அமர வைப்பதற்கும் விரும்பவில்லை. 'அதிகாரத்துக்குள் அமர வேண்டும்' என உறவுகள் சொல்வதை, அமைதியாக கேட்டுக் கொண்டு வருகிறார் சசிகலா. ஆனால், நடராஜனுக்கு நெருக்கமான உறவினர்களோ, 'ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது முதல் பலவிதமான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். ஜெயலலிதாவைப் போல் அனைத்தையும் எதிர்கொள்வது கடினம். பொதுக்குழுவில் பேசியிருந்தால், தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அண்ணா தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவி என்பதே மிகப் பெரிய பதவி. சோனியா காந்தியைப் போல், கட்சியையும் ஆட்சியையும் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வது நல்லது. வரக் கூடிய நான்கரை ஆண்டுகளில் மிகச் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தால், மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதிக்கலாம். அமைச்சர்களும் கட்சித் தலைமையின் வழிகாட்டுதல்படி நடப்பார்கள்' என விரிவாகப் பேசியுள்ளனர். இந்த இரண்டு முடிவில் எதை முன்னெடுப்பது என்றுதான் சசிகலா ஆலோசித்து வருகிறார்" என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.
ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, "கட்சிப் பதவிக்கு சீனியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் சசிகலாவை முன்னிறுத்தினார்கள். அனைத்தையும் ஓ.பி.எஸ் தலைமையிலேயே செய்து முடித்துவிட்டனர். 'எங்களுக்கு எதிராக அவர் இல்லை' என்பதை மக்கள் மத்தியில் காட்டும் முயற்சி இது. பொதுச் செயலாளர் சசிகலா என்றுதான் ஓ.பி.எஸ் சொன்னார். சக அமைச்சர்கள் சொன்னதைப் போல, 'முதல்வர் சசிகலா' என அவர் இதுவரையில் சொல்லவில்லை. 'ஆட்சி அதிகாரத்துக்குள் சசிகலா வந்துவிட்டால், ஓ.பி.எஸ் நிலைமையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சசிகலா உறவினர்கள் இன்னும் சந்தேகத்தோடுதான் அவரைப் பார்க்கின்றனர். 'வருமான வரித்துறை சோதனை, ராம மோகன ராவை சிக்க வைத்தது ஓ.பி.எஸ்தான்' என நம்புகின்றனர். 'புலி வாலைப் பிடித்த கதையாக அனைத்தும் சென்று கொண்டிருக்கிறது. ' உங்களுக்கு ஆதரவாகத்தான் ஆளுநர் இருக்கிறார். நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் சென்றாலும், நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக ஓட்டளித்தால், ஆட்சி கவிழும் என்ற அச்சமும் அமைச்சர்கள் மத்தியில் இருக்கிறது. மாறாக, ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக தொண்டர்கள் உங்கள் பக்கம் வருவார்கள். முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்' என விரிவாக எடுத்துரைத்தாலும், ஓ.பி.எஸ் எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறார். முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறார். அனைத்தும் பேசி முடிக்கப்பட்டுவிட்டன என வெளியில் உலவும் கேள்விக்கு, பதில் சொல்லும் முடிவில் அவர் இல்லை" என்கின்றனர்.
நடராஜ வியூகங்கள் அனைத்தும் மர்மமாகவே நடப்பதால், எதையும் கணிக்க முடியாமல் சொல்படி நடக்கும் கிளிப் பிள்ளைகளாக வலம் வருகின்றனர் அமைச்சர்கள். கிளிப் பிள்ளைகளா.. கிலி பிடித்துக் கிடக்கும் பிள்ளைகளா என்ற கேள்விகளும் தொண்டர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.