Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

வலு குறைந்து கரையைக் கடக்கும்...! நாடா புயல் அப்டேட்


வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்றுள்ளது. 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ள புயல் சின்னம் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

வலு குறையும்

தென்மேற்கு வங்கக் கடலில்  சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில்  330 கி.மீ தொலைவில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து தென் கிழக்காக 270 கி.மீ தொலைவிலும் நாடா இருக்கிறது. திரிகோணமலையில் இருந்து வடக்கு வடகிழக்காக 210 கி.மீ தொலைவில் இருக்கிறது. தொடந்து இந்தப் புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலு குறையும். ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாகவே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு கடல் பகுதியில் வேதாரண்யம்-புதுச்சேரி இடையே கடலூரின் தெற்குப் பகுதியில் டிசம்பர் 2-ம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கும்.வலு குறைந்து கரையைக் கடப்பதால் புயலால் கடுமையான பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.

காற்றின் வேகம் குறையும்

நாடா புயலின் தாக்கத்தால் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும்போது தரைகாற்றின் வேகமும் குறையும். இன்று மாலையும், இரவிலும் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 2-ம் தேதி காலையில் கரையைக் கடந்த உடன் தரைக்காற்றின் வேகமும் குறைந்துவிடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்தான் காற்று வீசும். 3-ம் தேதிக்குப் பின்னர் காற்றின் வேகம் முற்றிலும் குறைந்து விடும். வழக்கமான தரைகாற்றே வீசும்.



மழை நிலவரம்

புயல் வலு குறைவதால் காற்றின் வேகம் குறைகிறது. அதே நேரத்தில் மழை அதிக அளவு பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும். குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை முதல் மிக, மிக கனமழை வரை பெய்யக்கூடும்.இப்போதைய நிலவரப்படி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவலையில் இருந்த விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.  சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நள்ளிரவுக்குப் பின்னர் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி வேதாரண்யத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. அதிராம்பட்டினம், நாகபட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
காரைக்கால், கும்பகோணம், குடவாசல், ஆடுதுறை, மயிலாடுதுறை, நன்னிலம், திருவையாறு, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது. திருச்சி, கரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழகத்தை இந்த மழை ஒரளவுக்கு காப்பாற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.