இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் சிறுவர்களைப் பார்ப்பது அரிதாக உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறக் குழந்தைகள்கூட தொலைக்காட்சி, செல்ஃபோன், வீடியோ கேம் என வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் அவர்களின் கற்பனைத்திறனும் கேள்வி கேட்கும் சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஒரு கிராமத்து மாணவர் தன் கற்பனைத்திறனால் எல்லோரையும் அசத்தி, பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.
மகேஷ்வரன், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். ஓவியத்தில் ஆர்வம் உள்ள இவர், தன் கற்பனைத்திறனால் வீணான பல்வேறு பொருட்களைக்கொண்டு உருவங்களை உருவாக்குகிறார். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே தனது ஓவிய ஆசிரியரிடம் இந்தக் கலையைக் கற்க ஆரம்பித்த மகேஷ்வரன், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்களை உருவாக்கியுள்ளார்.

மகேஷ்வரனிடம் பேசினோம்.
ஆசிரியர் கற்றுத் தந்த கலை!
''கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம்தான் எனது சொந்த ஊர். எனக்கு ஓவியம் என்றால் மிகவும் பிடிக்கும். எனது ஆர்வத்தைக் கண்டு ஓவிய ஆசிரியர் உமாபதி சார்தான் இக்கலையை எனக்குக் கற்றுத் தந்தார். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் என்பதால் ஆர்வத்தோடு நானாகவே நிறைய செய்துபார்த்தேன்.''
வீண் பொருட்கள் கற்பனையால் கலைப்பொருட்கள் ஆயின!

''வீணாகப் போகக்கூடிய தென்னை, பனை மரத்துப் பட்டைகள், கருக்குகள், கட்டைகள், கோணி, மூங்கில், பிரம்பு, பாக்குத்தட்டுகள், வாழை இலை, அரச இலைச் சருகுகள், பிளாஸ்டிக் பொருட்கள் முதலியவற்றைக்கொண்டு, என் கற்பனைக்கேற்ப உருவங்களை உருவாக்குகிறேன்.
பாட்டிதான் அம்மா, அப்பா!
எனக்கு அப்பா, அம்மா இல்லை. எனது பாட்டிதான் என்னையும் தங்கையையும் வளர்க்கிறார். ஆரம்பத்தில், 'குச்சியும், கோலுமா என்னதான் செஞ்சுட்டே இருக்கியோ' என பாட்டி அடிக்கடி திட்டுவதுண்டு. ஆனால், இதில் நான் நிறையப் பரிசுகள், பாராட்டுக்களைப் பெற்றதும் இப்போது சந்தோஷப்படுகிறார்.
மறக்கமுடியாத பாராட்டு!
சென்ற வருடம், புதுவை அரசின் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது ஏழு நிமிடங்களுக்குள் நானும் எனது நண்பன் ராகேஷ்குமாரும் கரித்துண்டால் 8 அடி உயரம் 5 அடி அகலத்தில் காமராஜர் உருவத்தை வரைந்து அசத்தினோம். விழாவுக்கு வந்திருந்த அப்போதைய புதுவை முதல்வர் ரங்கசாமி, எங்களைப் பாராட்டி, 5,000 ரூபாய் பரிசாகக் கொடுத்தார். பிறகு, அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் பள்ளியைப் பார்வையிட வந்தபோது, நான் செய்துவைத்திருந்த சிற்பங்களைப் பார்த்துப் பாராட்டியதோடு, எங்கள் பள்ளியைச் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்தனர். என் வாழ்நாளில் மறக்கமுடியாத பாராட்டுகள்!

எதிர்கால இலட்சியம்!
உமாபதி சார் எனக்குக் கற்றுந்தந்ததுபோல, இதை நன்கு கற்றுக்கொண்டு நானும் மற்றவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். என் தங்கையை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும். பண நெருக்கடியிலும் எங்களைப் படிக்கவைத்து கவனித்துக்கொள்ளும் தாத்தா, பாட்டி மற்றும் மாமாவுக்கு உதவியாக இருக்க வேண்டும். அனிமேஷன், ஆர்ட் போன்ற துறை சார்ந்த படிப்பினைத் தேர்ந்தெடுத்து, அதில் சாதிக்க வேண்டும்!"

சாதனைகள் வளரட்டும்!
மகேஷ்வரன் பற்றி கலை ஆசிரியர் உமாபதி கூறுகையில்...
''மகேஷ் போன்று திறமையான மாணவர்கள் உருவாகக் காரணமான இந்தக் கலையைக் கற்பிப்பதில் நான் பெருமையடைகிறேன். கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களிடம் அசாத்தியத் திறமை இருப்பதை உணர்ந்து அவர்களுக்கு உதவினால், அவர்கள் மகத்தான சாதனைகள் புரிவார்கள் என்பதற்கு மகேஷ்வரன் முன்னுதாரணம். இந்தக் கலைக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர், 'அழிவின் உயிர்ப்பு'. அழிந்துபோகும் பொருட்களைக்கொண்டு உயிரோட்டமான சிற்பங்களை உருவாக்க முடியும் என்பதாலேயே இந்தப் பெயரைத் தேர்வுசெய்திருக்கிறோம். இந்தப் பொருட்கள் மூலம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தியுள்ளோம். பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றார் பெருமையுடன்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.