"செய்வீர்களா... நீங்கள்? செய்வீர்களா?" என்று தேர்தல் பிரசாரங்களில் போது கம்பீரமாக முழங்கிய ஜெயலலிதா, தன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் சொன்ன சில முக்கியமான வாசகங்கள் மட்டும் தொகுப்பாக இங்கே... ஜெயலலிதா சொல்லிய ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் வலிமை, வேதனை, போராட்டம், நம்பிக்கை... மிகுந்து இருப்பதை இவர் சொன்ன வாக்கியங்களில் இருந்தே புரிந்துகொள்ள முடிகிறது.
"என்னுடைய வாழ்க்கையும், கரியரும் ஒரு சூறாவளி காற்றை போன்றது."
"எனக்கு உள்ளும் சோகம், கோபம், அழுகை எல்லாம் உண்டு. ஆனால், ஒரு தலைமை பொறுப்பிற்கு வரும்போது உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது."
"அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவைச்சு, சாதாரணமான குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன் ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்பிலே இருந்திருக்காது."
"என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை. நம் கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும். இதை யாராலும் தடை செய்ய முடியாது."
"நமது இலட்சியம் உயர்வானது! நமது பார்வை தெளிவானது! நமது வெற்றி முடிவானது!"
"இந்தியாவில் நடைபெறும் அத்தனை போராட்டங்களிலும் 25 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கின்றன என்றால் அவ்வளவு தாராள மனதோடு ஜனநாயக நெறிமுறைகளை காக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த அரசும், காவல்துறையும் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி வழங்குகின்றன என்று தான் பொருள்."

"எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான்; தமிழக மக்களுக்காகத்தான்."
“குடும்ப அரசியல் என்னும் நச்சு மரம் தமிழகத்தில் வேர்களையும், விழுதுகளையும் பலப்படுத்திக்கொள்ளுமேயானால் அது தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்தாக முடியும்.”
"காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது, எனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் கிடைத்த வெற்றி."
"எப்போதெல்லாம் நான் ஆட்சிக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் தமிழ் சினிமாத் துறைக்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகிறேன்."
"தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக் கூடாது. இந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதுதான் என்னுடைய இலட்சியம்."
"எனக்கென்று யார் இருக்கிறார்கள். நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்."
"உயிரைவிட வேண்டுமானால் கட்சிக்காக விடத்தயார்."
"என் வாழ்வின் ஒருகட்டத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன். ஆனால், என் மன வலிமையினால் அதில் இருந்து மீண்டு வந்தேன்."
"முதல் தவறு, என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அநேகம் பேர்கள் இருக்கும்போது சுயசரிதம் எழுத ஆரம்பித்தது. இரண்டாவது தவறு, எழுதுவதில் ரொம்ப ஃபிராங்க் ஆக இருந்ததுதான்."

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.