Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

கறுப்பு பணத்தை மாற்றும் சினிமா, ரியல் எஸ்டேட் துறைகள்... எப்படி சமாளிக்கும் வருமான வரித்துறை?


Demonetization அறிவிப்பு சாதாரண மனிதனையும் கோடியில் பேச வைத்துது விட்டது. ''மாப்பிள்ளை 200 சி வந்துகிட்டு  இருக்கு. 30% கமிஷன் ஓகே வா '' என்னும் வார்த்தை  கடந்த ஒரு மாதத்தில் ஆங்காங்கே கேட்க முடிகிறது. மோடி அறிவித்த இரவில்  இருந்து கறுப்பு பணத்தை பதுக்குவது எப்படி என்கிற தேடல் கூகிளில் ட்ரெண்ட் ஆனது. அவசரத்தில் 5000 வைத்து இருந்தவர்கள்  கூட கமிஷன்  கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றி கொண்டனர்.இப்படி கடந்த 8 ந் தேதியில்  இருந்து எந்த  எந்த வழிகளில்  எல்லாம் கறுப்பு பணத்தை பதுக்கினார்கள். அதை  வருமான வரி துறையினர் எப்படி கண்டு பிடிக்க போகிறார்கள் என்பது  தான்  அப்போலோவையும் தாண்டி மக்களிடையே எழுந்துள்ள  கேள்வி.

செல்லாது  அறிவிப்பு  வந்த  நாளில்  இருந்தே கறுப்பு  பணம்  மாற்றும் இடமாகவும், இருக்கும் இடமாகவும்  இருக்கின்ற  சினிமா ,ரியல் எஸ்டேட்,தங்க வியாபாரம் எப்படி நடந்தது?

நகை 

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்த இரவு முதலில் தொடங்கிய  கள்ள  வியாபாரம் தங்கம் தான். அறிவிப்பு வந்த 4 மணி நேரத்தில்  சென்னை சவுக்கார் பேட்டையில் மட்டும்  450 கிலோ  தங்க கட்டிகள்  வித்து தீர்ந்தன. தி. நகரில் உள்ள  பெரும்பாலான  நகைக்கடைகளில் நள்ளிரவு  வரை வியாபாரம் களை கட்டியது. டிசைன்ஸ் எதையும் பார்க்காமல் 1 லட்சம் ,10 லட்சம் என  தொகை கணக்கில்  நகைகள் விற்கப்பட்டன.

பணத்தை நகையாக மாற்றுவதில் பல்வேறு  வசதிகள்  உள்ளன. நிலம்,வீடு போன்ற சொத்துக்களை  விட நகையாக இருந்தால் வருமான வரித்துறையினர் கண்டுபிடிப்பது கடினம். பரிவர்தனைகளுக்கும் சுலபம் என்பதால் நகை மீதான முதலீடு என்பது எப்போதுமே இந்தியாவில்  அதிகம்.ஆண்டுக்கு 880 டன் தங்கம் இறக்குமதி  செய்யப்படுவதை வைத்தே இதன் முக்கியத்துவத்தை உணரலாம். செல்லாது அறிவிப்பால் முதல் 2 வாரத்திற்கு கறுப்பு பணம் வைத்து இருப்போர்அதிகமாக மாற்றியது தங்கத்தை  தான். தமிழக அரசியல் புள்ளி ஒருவர் கூட 500 கோடி அளவிற்கு வெளிநாடுகளுக்கு சென்று தங்கக்கட்டிகளாக  மாற்றி வந்துள்ளார்.இது போக லோக்கல் அடகு கடை வியாபாரிகளிடமும்  நகை பரிவர்த்தனைகள் நடந்தன. பெரிய கடைகள்  அனைத்துமே அன்று இரவு மட்டும் பான் கார்டு எதுவும் இல்லாமல் நகைகளை விற்றுள்ளனர். 8ந் தேதி வியாபாரம் கணக்கில்  வராது என்பதால் இத்தகைய பரிமாற்றத்தை அவர்கள் துணிந்து செய்தனர்.

gold


மற்ற  எல்லா  வழிகளையும் அடைத்தாலும் தொடர்ந்து கறுப்பு பணம் தங்கமாக மாறுவதை மத்திய அரசால் தடுக்க  முடியவில்லை. இதற்கு முற்று புள்ளி வைக்கவே நகை கட்டுப்டு  திட்டத்தை கொண்டு  வந்தது  மத்திய அரசு.

இது பழைய சட்டம் தான்  என்றாலும் அதில் செய்துள்ள திருத்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு  அதிகமாக சேர்க்கப்பட்ட தங்கத்திற்கு 30% வரி என்பதை 60% கூட்டப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தை  வைத்து தான் வருமான வரித்துறை தனது அடுத்த  கட்ட நடவடிக்கையை துவங்க உள்ளது .ஆனால் இதையும் மிஞ்சும்  விதமாக சில தங்க  பரிவர்த்தனைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததாக  கூறப்படுகிறது.அடகு வைக்கபட்ட நகைகளை  ஏலம்  விட வைத்து அதன் மூலம் பழைய நகைகளை சிலர்  பெரும் அளவுக்கு  வாங்கி உள்ளனர். பாரம்பர்யய  நகைகளுக்கு சட்டத்தில்  விலக்கு  அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து  இது நடந்துள்ளது. இதன் மூலம்  பழைய  நகைகளுக்கு மார்க்கெட்டில் கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது

சினிமா 

நகைக்கு அடுத்தபடியாக கறுப்பு  பணத்தில் அதிகம் புரளும் ஒரு துறை சினிமா  தான். கடந்த காலங்களில் தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட்முதலாளிகளும் குவிந்து கிடந்த  இடம்  சினிமா.கடந்த சில வருடங்களில் மட்டும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு பட்ஜெட் படங்களின்  எண்ணிக்கை அதிக அளவில் தயாரிக்கப்பட்டன.முன்னணி நடிகர்கள்,நடிகைகள்,டைரக்டர்கள் சம்பளம் பிளாக்கில் தான் வாங்கப்பட்டது.

 அதனால்  கறுப்பு பணத்தை மாற்றும் முக்கிய  இடமாக சினிமா விளங்கியது. தற்போது நடிகர் நடிகைகள் எல்லோரும் சம்பளத்தை ஒயிட்டில் கேட்பதால் புதிய  ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை.அதே வேளையில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும்  முன்னணி நடிகர்களின் படங்களை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டுள்ளது.பெரிய படங்கள்  மட்டும் அல்ல சின்ன  பட்ஜெட் படங்களுக்கும் இந்த  போட்டி தொடர்கிறது.அதற்கான  காரணம் முறையாக கணக்கு காட்டி வங்கி  பரிவர்த்தனைகள்  வைத்துள்ள பட  நிறுவனங்களின்  படங்களை மொத்த  விலை  கொடுத்து சிலர் வாங்கியுள்ளனர். அதே போல் நின்று போன பல  படங்களின் படப்பிடிப்பும்  தற்போது  துவங்கியுள்ளது.

ரியல் எஸ்டேட் 
செலவையும், வருமானத்தையும் ஒப்பிடவே  முடியாத துறை ரியல் எஸ்டேட் சாதாரண மனிதரையும்  கோடிஸ்வரர் ஆக்கியது இந்த  துறை தான். தமிழகத்தை பொறுத்த  வரை பல்வேறு சட்ட திட்டங்களால் துவண்டு  போய்  இருந்த இத்துறையை செல்லாது என்ற  அறிவிப்பு நிமிர  வைத்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் இதுவரை 12 ஆயிரம்  கோடி  மதிப்புள்ள 1 லட்சம்  வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.

இதை  மையமாக வைத்து  தான்  பெரிய அளவில்  கறுப்பு பணத்தை  மாற்றியுள்ளனர். இந்த வீடுகளை கட்டிய  கட்டுமான  நிறுவனங்கள் வங்கியில் வாங்கியுள்ள  கடன்களை அடைப்பது.அல்லது கட்டுமான  செலவு  கணக்கில் கறுப்பு பணத்தை காட்டுவது அதிகம்  நடந்துள்ளது.புதிய  வீடுகள் வாங்குவது  என்கிற பரிமாற்றமும் நடந்துள்ளது. இதில் தமிழ்நாட்டை விட முன்னணியில் இருப்பது பெங்களூரும்,டெல்லியும்  தான் இங்கு  உள்ள  பலரும்  அங்கு சென்று வீடுகளை  வாங்கியுள்ளனர்.

என்ன நடவடிக்கை  

பல்வேறு வழிகளில் கறுப்பு பணத்தை மாற்ற பலர் முயற்சி எடுத்துள்ளனர். அதை  எல்லாம்  எப்படி கண்டுபிடிக்க போகிறது வருமான வரித்துறை என்று அதன் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "எங்களுடைய  கண்காணிப்பில்  முதலில்  இருப்பது சினி இண்டஸ்ட்ரீஸ் ,ரியல் எஸ்டேட்,தங்க வியாபாரம். இந்த  வழிகளில்  தான் கறுப்பு  பணத்தை அதிக  அளவுல மாற்ற  முடியும் . நகை  வியாபாரத்தை பொறுத்தவரை  அடகு வைக்க வருபவர்களிடம் பான் கார்டு,ஆதார் கார்டு வாங்கி வந்த அடகு  கடைகள்  அந்த  கார்டுகள்  மூலம்  மிக பெரிய நகை பரிவர்த்தனைகளை  செய்து உள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த8 ந் தேதிக்கு  பிறகு நகை கடைகள்,அடகு கடைகள் போன்றவற்றில் நடந்துள்ள பரிவர்த்தனைகளை கையில் எடுத்துள்ளோம் .அதை  வைத்தே அண்மையில் சில நகை கடைகளில் ரெய்டும் நடந்தன .சினிமா பொறுத்த  வரை  முழு  கண்காணிப்பில் உள்ளது. புதிய  படங்களின்  தொடக்கம் ,டிக்கெட்  வருமானம்  உள்ளிட்ட  பல  விஷயங்கள் அதில் உள்ளது.ரியல் எஸ்டேட் துறையை  பொறுத்த வரை  புதிய  சொத்து பரிமாற்றங்கள்  அனைத்தையும் ஆய்வு  செய்து வருகிறோம்.சொத்துக்களை  ஆதார் கார்டுடன் இணைக்கும் திட்டம்  நடைமுறைக்கு  வர உள்ளது. அப்படி வந்தால் ஒருவருடைய  சொத்துக்களின்  முழு பட்டியலும் தெரிந்துவிடும். எதையும்  மறைக்க  முடியாது.

அதனால்   கருப்பு  பணத்தில் சொத்து  வாங்கியவர்கள் கண்டிப்பாக மாட்டுவார்கள் . இதற்கு அடுத்து  வங்கி பரிவர்த்தனைகள். சிலர் கறுப்பு பணத்தை  வாங்கி தங்கள்  கணக்கில்  செலுத்தி  திருப்பி  அளித்து  வருகின்றனர்.வங்கி  கணக்கு  பரிவர்த்தனை  எப்படி வருமான வரி துறைக்கு  தெரியும் என்று சிலர் கேட்கின்றனர்.வங்கிகளின் நெட் ஒர்க்  ரிசர்வ் வங்கியில் இருக்கு. அதன் மூலமா ஒருத்தர் வங்கி கணக்குல என்ன  பரிவர்த்தனை பண்ணி  இருக்காருன்னு சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரியாமலே எடுக்க  முடியும்.அதன் படி கடந்த  25 நாட்களில் தமிழ்நாட்டுல மட்டும் 500 கணக்குகளுக்கு மேல முடக்கப்பட்டு இருக்கு

சென்னை தி .நகர் உள்ள ஒரு வாங்கி கிளையில்  மட்டும் 12 அக்கௌன்ட்  முடக்கி  இருக்கோம். இதுல பாதி  சேவிங்ஸ் அக்கௌன்ட்ஸ். திடிர்ன்னு அதுல 20 லட்சம் 30 லட்சம் டெபாசிட் ஆனது. அது மாதிரி பெரிய அளவுல பரிவர்த்தனை பண்ற கரண்ட்  அக்கௌன்ட்களையும் இந்திய முழுக்க முடக்கி  இருக்கோம்.அதே மாதிரி இந்த 8 ந் தேதிக்கு  பிறகு வெளிநாடு டூர்  போனவங்களும் கண்காணிக்கப்ட உள்ளனர். ஏனென்றால்    விமான  நிலையங்களில்  500,1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்வது திடிரென 1000 மடங்காக அதிகரித்தது.

விமான டிக்கெட்டுகளை புக் செய்வதன் மூலம் கருப்பு பணத்தை உடனடியாக மாற்றலாம் என்பதால் இந்த வழியை பயன்படுத்துவதாக கூறப்பட்டது. வருமானத்தில்  காட்டபட்ட அளவை  தாண்டி  வெளிநாடுகளுக்கு  டூர் சென்றவர்கள்  பட்டியல் தயாராகி  வருகிறது.அதே போல்  நிறைய  பேர் மிச்சுவல் பண்ட் வாங்கி இருக்காங்க பெரிய நிறுவங்களின் ஒரு பங்கே 33 ஆயிரம் போகுது. மிக சுலபமாக  கறுப்பு பணத்தை மாத்துற வழி  இது. அதுவும் இல்லாம ஃபண்ட்ல போட்டடா  நடவடிக்கை கிடையாது ன்னு சிலர்  சொல்றாங்க. அப்படி எல்லாம் எதுவும்  இல்லை. அதையும் கண்காணிச்சுக்கிட்டு  தான்  இருக்கோம் . பொறுத்து  இருந்து  பாருங்க  எங்க  ஆக்ஷன் என்னன்னு தெரியும் " என சொல்லி முடித்ததார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.