கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அன்று ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தபின், பணமில்லா பரிவர்த்தனை செய்ய வேண்டிய கட்டாயம் நம்மில் பலருக்கும் உருவானது. மத்திய அரசாங்கமும் இனி மக்கள் பெருமளவில் கேஷ்லஸ்-ஆக பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறது.
இந்த நிலையில், கேஷ்லஸ்-ஆக இதுவரை மாறியவர்கள் எத்தனை பேர் என நாணயம் விகடன் டிவிட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம். இந்த சர்வே முடிவு சுவாரஸ்யமான முடிவுகளை நமக்கு எடுத்துச் சொன்னது.
இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 23% நாங்கள் முழுவதுமாக கேஷ்லஸ்-ஆக மாறிவிட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே கேஷ்லஸ்-ஆக செயல்படுபவர்களாக இருக்க வாய்ப்புண்டு. அப்படி இருந்ததால், இந்த திடீர் சூழலில் தங்களை முழுவதுமாக கேஷ்லஸ்-ஆக மாற இவர்களால் முடிந்திருக்கிறது.
சுமார் 43% பேர் நாங்கள் கொஞ்சமாக கேஷ்லஸ் முறைக்கு மாறியிருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். நெருக்கடியான இந்த சமயத்தில் பணம் கிடைக்காமல் போவதினால், முடிந்தவரை எங்கெல்லாம் டெபிட் கார்டு தந்து பணப் பரிமாற்றம் செய்ய முடியுமோ அங்கெல்லாம் செய்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 34% பேர் நாங்கள் கொஞ்சம்கூட கேஷ்லஸ்-ஆக மாறவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக, கிராமப்புறங்களில் இருப்பவர்களாக இருக்கலாம். இவர்களிடம் டெபிட் கார்டு இருந்தாலும், அதனைக் கொண்டு கேஷ்லஸ் ஆக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு வாய்ப்பில்லாதவர்களாக இருக்கலாம்.
சுருக்கமாக, கேஷ்லஸ்-ஆக மாறவேண்டும் என்பது நீண்ட காலத்தில் நடக்க வேண்டியது. அரசும் கேஷ்லஸ்-ஆக நடக்கத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தரவேண்டும். மக்களும் இனி கேஷ்லஸ்-ஆக பணப் பரிவர்த்தனை செய்வது என்று முடிவெடுக்க வேண்டும்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.