Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

பர்ஸ்ட் நைட்டில் பால் எதற்குங்க..? சுடச்சுட பதில் உள்ளே..! வாங்கோ..!!


அந்த காலத்தில் திரைப்படங்களில் பார்த்தால் முதலிரவு காட்சிகளில் ஹீரோயின் பால் செம்புடன் அறைக்குள் வருவார். நம்ம ஹீரோவிடம் பால் செம்பை
நீட்டுவார் அவரும் செம்பை வாங்கி பாலை குடித்துவிட்டு மீதியை ஹீரோயினிடம் கொடுப்பார்.

அதென்னவோ தெரியவில்லை முதலிரவுக்கும் பாலுக்கும் அப்படி என்னதான் காம்பினேஷன்னு பார்ப்போமா?

இந்துக்களின் சடங்கு முறைகளில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலை புனிதமாக கருதுவதாலும், முதலிரவில் அருந்துவதாலும் வாழ்க்கை தூய்மையாக துவங்குவதாக கருதப்படுகிறது.

ஆதி கால மக்களுக்கு விவசாயம் தான் முதல் தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்கியுள்ளது. விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த பசுவை கடவுளாக மதித்தனர்.

பசுவின் சாணம் கிருமிநாசினியாகவும், பால் வலிமையை கொடுக்கும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கூறுகின்றனர்.

பசுவும் அதன் மூலம் கிடைக்கும் பாலும் அதிர்ஷ்டம் என கருதினர். ஆகவே இல்வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது பால் பருகுவதால் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைக்கும் என்று கருதினர்.

முதலிரவில் அசதியாக இருக்கும் தம்பதியினருக்கு புத்துணர்ச்சியாகவும், உடலில் சோர்வை நீக்கி சுறுசுறுப்பையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

பாலில் உள்ள டிரிப்டோபென் என்ற அமினோ அமிலம் உடலை இலகுவாக வைக்க உதவுமாம். இதற்காகவும் முதலிரவில் பால் அருந்துவது முக்கியமாக கருதப்படுகிறது.

பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் போன்றவைகளை சேர்த்து பருகும்போது பாலுணர்வு தூண்டப்பட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதியருக்கு நல்ல பலனை கொடுக்கிறது.

பால் பருகுவதால் உடல் சூட்டை தணிக்கும் என்றும் திருமணமான புதுமண தம்பதிகள் சில மாதங்களுக்கு பால் அருந்துவதை நம் முன்னோர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.