Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

பேருந்தில் கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்!



தூத்துக்குடி மாவட்டத்தில்  பேருந்தில் கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தேனியிலிருந்து திருச்செந்தூர் வரும் அரசுப்பேருந்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் தாளமுத்து நகர் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில்  புதூர் பாண்டியாபுரம் விலக்கில் சோதனை நடைபெற்றது.
அப்போது புதூர் பாண்டியாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய  பெண் ஒருவர் வேக வேகமாக நடந்து சென்றுதையடுத்து சந்தேகத்தின் பேரில்  அப்பெண்ணிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரிடமிருந்த சுமார் இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் இவர் பிரபல கஞ்சா வியாபாரி   கருப்பாயி , என்பது தெரியவந்தது. தேனியிலிருந்து கஞ்சாவை வாங்கி ஊர் ஊராக விற்பனை செய்துவரும் கருப்பாயி மீது மதுரையில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.