Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

எதையும் மறைக்கக் கூடாது பன்னீர்…! டெல்லி அழைப்பு..! சசிகலா,ரெட்டி…உறவுகளை காட்டிக் கொடுப்பாரா முதல்வ



அம்மா..ஜெ இருக்கும் வரை நாள் நட்சத்திரம், நேரம், காலம், ராகு, கேது, அஷ்டமி..என தொட்டதுக்கும் சாஸ்திரம் பார்ப்பார். செவ்வாய் அவருக்கு ஆகவே ஆகாது..!
ஆனால், நாளை முதல்வரை டெல்லிக்கு அழைத்திருக்கிறார் பிரதமர்..! வெளியே சொல்லும் காரணம் புயல் நிவாரணம். உட்காரணம் தமிழக அரசியலில் அடிக்கப் போகும் பெரும் புயலுக்கான அச்சாரம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
மிகவும் பயந்த நிலையில் தான் முதல்வர் பன்னீர் செல்கிறார் என்கிறார்கள்..!? அதற்கு முன்பாக போயஸ் கார்டனில் ஒரு வகுப்பே எடுத்ததாக சொல்கிறர்கள்..!
டெல்லியில் என்னெல்லாம் கேட்பார்கள். அதற்கு என்னெல்லாம் பதில் சொல்ல வேண்டும் . எதை சொல்ல வேண்டும் .
எதைச் சொல்லகூடாது. ஒருமணி நேரம் வகுப்பு. அமைதியாக கேட்டுக் கொண்டாராம் முதல்வர். தலையை மட்டுமே ஆட்டி வைத்தார்..!
ஆனால், பன்னீரை என்றோ தங்கள் கைபிடிக்குள் டெல்லி வைத்துக் கொண்டது. ஜெ., உடல் அடக்கத்தின் போது பன்னீரை பிரதமர் மார்போடு அணைத்துக் கொண்டதை அர்த்த புஷ்டியோடு பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதே நேரம் சசிகலா தலையில் பிரதமர் கை வைத்ததற்கும் ஆயிரம் அர்த்தம் சொல்கிறார்கள்..!
நாளை டெல்லி சந்திப்பில் பிஜேபி தலைவர் அமித்ஷா கூட இருப்பார். அல்லது முதல்வர் அவரை தனியே சந்திப்பார்.
சுப்பிரமணியன் சுவாமியும் இந்த சந்திப்பில் உடன் இருக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் இவர்கள்..!
அதாவது நாளை கிட்டத் தட்ட முதல்வரை விசாரிக்கவே டெல்லி அழைக்கிறது. இந்த சந்திப்பின் முடிவில் தான் சசிகலா. அப்போலோ ரெட்டி..மற்றும் லண்டன் டாக்டர் ஆகியோரின் எதிர்காலம் தெரியும் என்கிறார்கள்..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.