Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

இருக்கும் போதும் விழுந்தார்! இறந்த பின்பும் விழுகிறார்! உண்மைத் தொண்டர் ஓ.பி.எஸ்.!



அதிமுக அமைச்சர்கள் பலர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும் இதுவரை பெரிய புகார்களில் சிக்காதவர் ஓ.பி.எஸ்.  தனது  எளிமையால்  மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தரையில் கூட திடீரென்று உட்கார்ந்து விடுவார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரது காலில் விழுவதோடு மட்டுமல்லாமல், ஜெயலலிதா வரும் கார், ஹெலிக்காப்டரை கூட வணங்கினார். அதிமுக அமைச்சர்களின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் வெறும் நடிப்புத் தான்.
அவர்களுக்கு ஜெயலலிதா மீது உண்மையான மரியாதை இல்லை என பொதுமக்கள் பேசுவதுண்டு. சில சம்பவங்கள் மக்கள் பேசுவது உண்மை தானோ என யோசிக்க தோன்றியது. முதலமைச்சர் சிறை சென்றபோது, அழுது கொண்டே பதவி ஏற்ற அமைச்சர்கள், அவர் இறந்த பின்பு பதவி ஏற்கும் போது அழவில்லை.
சிலர் இறந்த வீட்டில் சிரித்த சம்பவமும், செல்பி எடுத்த சம்பவமும் அரங்கேறியது. சசிகலாவே சிரித்தது வீடியோ காட்சிகளில் பதிவானது. ஆனால் அப்போது முதல் இப்போது வரை சோகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.
இன்று காலை ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்தால் எப்படி அவர் காலில் விழுவாரோ, அதே போல் இறந்த பின்பும் இன்று அவர் சமாதி முன்பு விழுந்தார்.
சமாதியில் விழும் எல்லோரும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர் ஆகி விட முடியாது. அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் ஓ.பி.எஸ். உணர்ந்தவர் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.