Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

ஜெ.வின், சொத்து இவர்களுக்கு தான் சேரும்!!..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்!!…



மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து அவரது ரத்த சொந்தங்களுக்கு தான் சேரும் என மூத்த பத்திரிகையாளரான இந்து என்.ராம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது தோழி சசிகலா ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் .
இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர் மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம். அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடாது என்று ராம் கூறியிருந்தார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கும் இந்து ராம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தாலும், அதை நம்பி குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்
இதனிடையே ,இரு தினங்களுக்கு முன்பு திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது ரத்த உறவுகளுக்கு தான் செந்தம் என இந்து ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
capture

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.