December 28, 2016
கடைக்குச் சென்ற யுவதி காதலனுடன் சல்லாபம்!! பற்றைக்குள் புகுந்து தாக்கினார் தந்தை
கடைக்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி காதலனுடன் பற்றைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் யுவதியின் தந்தையிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்.
குறித்த யுவதியின் காதலன் கீழ்ப் பகுதி ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் சேட்டுடன் தந்தையின் ஆவேசத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் நடுவீதியால் ஓடித் திரிந்தாக தெரியவருகின்றது.
எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
எழுதுமட்டுவாள் பகுதியில் வசிக்கும் குறித்த யுவதி, கடைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குறித்த யுவதி அப்பகுதிக்கு அண்மையில் வசிக்கும் மனைவியை இழந்த 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்துள்ளார்.
அந்தக் குடும்பஸ்தருடன் அப்பகுதிக்குச் சற்றுத் தொலைவில் உள்ள வீதியோரத்துக்கு அண்மையில் இருந்த பற்றைக் காட்டுக்குள் சேர்ந்திருந்த சமயம் அப்பகுதியால் சென்ற யுவதியின் தந்தை அங்கு தனது மகளின் சைக்கிள் அநாதரவாக இருந்ததைக் கண்டுள்ளார்.
அதனால் திடுக்குற்ற அவர் அப்பகுதியில் தேடுதல் நடாத்திய போது யுவதியை அங்கு காதலனுடன் அரைகுறை ஆடையில் இருப்பதை அவதானித்து அங்கு சென்று யுவதியையும் காதலனையும் தடியினால் கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து குறித்த யுவதியின் காதலன் ஏ9 வீதியால் கீழாடைகள் அற்ற நிலையில் நீண்ட துாரம் ஓடியதாகவும் யுவதியின் தந்தையும் துரத்தித் துரத்தி தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து வீதியால் சென்றவர்களும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் தந்தையைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தியுள்ளனர்.
அத்துடன தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தரையும் காயங்களுடன் மீட்டுள்ளனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
கடைக்குச் சென்ற யுவதி காதலனுடன் சல்லாபம்!! பற்றைக்குள் புகுந்து தாக்கினார் தந்தை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.