Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

தீபா, பன்னீா் கூட்டு ..! பொதுக்குழுவில் சசிகலாவுக்கு வேட்டு..! பரபரப்பில் அதிமுக…!!!



ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தமிழக முதல்வா் பன்னீா் செல்வம் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டா்கள் குரல் கொடுத்து வருகின்றனா்.
இந்த சம்பவத்தால் அதிமுகவின் முன்னணி தலைவா்கள் பொதுக்குழுவில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனா்.
இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆங்காங்கே பல போஸ்டா்களும் ஓட்டப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா இறந்த பின்பு அந்த இடத்தில் சசிகலா கும்பல் வருவதை  அதிமுகவில் உள்ள தொண்டா்கள் ஏற்கவில்லை.
ஆனால், பதவி சுகத்தை அனுபவிக்கும் அதிமுகவினா் ஏற்றுக் கொண்டுள்ளனா். அந்த இடத்திற்கு ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்த நிலையில் அவரது முதல் பேட்டியையே,டிவியில் வரவிடாமல் செய்ய முயற்சி செய்தார்.  சசிகலா. இந்த நிலையில் தமிழக முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வத்தின் நிலையோ மோசமாக உள்ளது.
உடன் பணியாற்றும் அமைச்சா்களே முதல்வா் சசிகலாதான் என்று கூறுகின்றனா். இதற்கு திருநாவுக்கரசா் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்தனா்.
சசிகலா, ஜெயலலிதாவிற்கு சத்தியம் செய்து தந்துள்ளார். அதில் நான் எம்எல்ஏ, எம்பி, மற்றும் கட்சிபதவிக்கு வரமாட்டேன். பொது வாழ்வில் ஈடுபட மாட்டேன் என்று கூறியிருந்தார்.
சசிகலா  சத்தியத்தை மீறும் பட்சத்தில் அதிமுக தொண்டா்களிடையே ஏற்படும் கோபம் அவரை அதிமுகவில் இருந்து அப்புறப்படுத்தி வைக்கும்.
சசிகலா ஜெயலலிதாவிடம் கூறியது போலதான் நடப்பார். அப்படி இல்லை என்றால்  தீபாவுக்கும், பன்னீா் செல்வத்துக்கும்தான் அதிமுக தொண்டா்களின் ஆதரவு இருக்கும். அது ஒட்டு மொத்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
அக்காவால் நான், அக்காவுக்காக நான் என்று சொல்லிவரும் சசிகலா இவ்வாறு நடக்கமாட்டார்.
கட்சியை பலி கொடுக்க துணியமாட்டார். அது அவருக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த அதிமுகவிற்கே அழிவை ஏற்படுத்தும்.
இதனால் பொதுக்குழு பரபரப்பு இப்போதே அதிமுகவினா் மத்தயில் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.