Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 17, 2016

சசிகலா கணவர் நடராஜனின் கொலை மிரட்டல். கராத்தே ஹூசனி



தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் மீது பிரபல கராத்தே வீரர் ஹூசைனி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய பணமோசடி மற்றும் கொலை மிரட்டல் குறித்த குற்றச்சாட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முள்ளி வாய்க்கால் முற்றம் என்ற ஈழத்தமிழர்களுக்கான நினைவு முற்றம் தஞ்சாவூரில் நிறுவப்பட உள்ளதாகவும் அதற்கு சிலை வடிக்க வேண்டும் என்று நடராஜன் தன்னிடம் ஆர்டர் செய்ததாகவும் ஹூசைனி கூறியுள்ளார்.
ரூ.75 லட்சம் பெற்றுக்கொண்டு இதற்கான சிலையை தான் வடிவமைத்ததாகவும், ஆனால் மீதி தொகையான ரூ.20 லட்சத்தையும், தனக்கான சம்பளத்தையும் கேட்டதற்கு நடராஜனும் அவருடைய ஆட்களும் தன்னை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் ஹூசைனி குற்றம் சாட்டியுள்ளார்
நடராஜனுடன் எந்த தொடர்பும் அதிமுகவினர் வைத்து கொள்ள கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டதால் முதல்வரின் விசுவாசியான தான் அதன் பின்னர் அவரிடம் வேறு எவ்வித தொடர்பு வைத்து கொள்ளவில்லை என்றும் தனக்குரிய மீதி பணத்தை கொடுத்தால் அந்த குறிப்பிட்ட சிலையை மட்டும் முடித்து கொடுக்க தயாராக இருந்ததாகவும் இரண்டு வருடங்களுக்கு முன் ஹூசைனி பேட்டி கொடுத்துள்ளார்.
சசிகலா தற்போது அதிமுகவின் முக்கிய பொறுப்பை ஏற்கவிருக்கும் நிலையில் ஹூசைனி பேட்டியளித்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.