December 25, 2016
வருமான வரித்துறை ரெய்டுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பில்லை.. தமிழிசை- அட இங்கபாருட......
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.கவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகளுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை இயல்பான ஒன்று. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பாமர மக்களின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற சென்றாலும் தவறு செய்தவர்கள் தப்பமுடியாது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் இருந்து அண்மையில் கணக்கில் வராத பணம் மற்றும் தங்க நகைகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராம மோகன் ராவ் போரூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை ரெய்டுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பில்லை.. தமிழிசை- அட இங்கபாருட......
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.