கடந்த வருடம் பேய் மழை பெய்த போது, 500சப்பாத்திகள் வாங்க 5 Km மழைவெள்ளத்தில் நடந்துமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவிய திலீபன் மகேந்திரன்..
இந்த வருடம் கடந்த இரு தினங்களுக்கு முன் வர்தா புயல் தமிழக கடலோர மாவட்டங்களை துவம்சம் செய்தது இப்போதும் திலீபன் களத்தில் இறங்கினார்.
ஒரு புறம் தனது இணையத் தளப் பணி..மற்றொரு புறம் மறைந்த ராம்குமார் இல்லத்தைத்தத்து எடுத்து அவர்களின் பிள்ளையாக மாறி செய்யும் உதவிகள்..
இன்னொரு புறம் இயற்கை சீற்றங்களின் போது உயிரைப் பணயம் வைத்து களமாடுதல் என தனது வாழ்கையைப் பொதுக் காரியங்களுக்காக அர்ப்பணித்து விட்டார் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
வர்தா புயல் வீசிய போதும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் ஓடிச்சென்று இடிபாடுகளை கவனிப்பதும்..!
புகலிடம் இல்லாமல் ஆங்காகே ஒண்டிக்கொண்டு இருக்கும் ஆதரவில்லாத மக்களை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பது..போர்வைகள் பெற்று கொடுப்பது என அசத்தி இருக்கிறார் திலீபன்..!
அசத்துங்கள் திலீபன்.. வாழ்த்துக்கள்…!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.