December 29, 2016
புத்தாண்டுக்கு கடுமையான நிபந்தனை.. மது குடித்தால் ஜெயில்..!
புத்தாண்டை முன்னிட்டு சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
ஓட்டல்கள், மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுபோன்று ஓட்டல்களுக்கு செல்லும் இளைஞர்கள் அதிகளவு மது குடித்துவிட்டு நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்டு வருவார்கள். அவ்வாறு ஈடுபடும் இளைஞர்கள் பெண்களிடம் அத்துமீறி தகாத செயல்களில் ஈடுபடவாய்ப்புள்ளது.
மேலும், நள்ளிரவு 1 மணிக்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்க ஓட்டல் நிர்வாகம் அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்தால் ஓட்டல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
புத்தாண்டுக்கு கடுமையான நிபந்தனை.. மது குடித்தால் ஜெயில்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.