Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

சேகர் ரெட்டி கைது! சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிபிஐ அதிரடி!


 போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கைது! சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிபிஐ அதிரடி!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலுவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டியும் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டர் சேகர் ரெட்டி. ரூ10,000 கோடிக்கும் அதிகமான தமிழக அரசின் ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. போயஸ் கார்டன் மற்றும் அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமானவர் சேகர் ரெட்டி.

 வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ131 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பிடிபட்டது. இதில் ரூ30 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இருந்தன.

விசாரணை
இதனடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேகர் ரெட்டி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சேகர் ரெட்டி. அவரது நண்பர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கைது இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறை
கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜனவரி 3-ந் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.




ராமமோகன் ராவ்
சேகர் ரெட்டி ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் ரெய்டில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.