Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசரின் மகன் குடிபோதையில் போலீசாருடன் தகராறு


தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் சென்னையில் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் சென்னையில் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை: சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், ராகேஷ், 40. பாரத ஸ்டேட் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஞாயிறன்ற இரவு பணி முடிந்து, வீட்டிற்கு அண்ணாநகர் - 2வது அவென்யூ வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த, சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது, நான்கு வாலிபர்கள், ராகேஷை வழிமறித்து, தாக்கி உள்ளனர். உடனே அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார், மேலாளரை தாக்கிய, நான்கு பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசருடைய மகன் விஷ்ணு மற்றும் அவரது நண்பர்கள் என, தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரும், சாதாரண வழக்குப்பதிவு செய்து, அவர்களை விட்டு விட்டனர்.

சாலையில் தடுத்து நிறுத்திய போலீசாரிடம் திருநாவுக்கரசரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தகாத வார்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.