Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 9, 2016

சசி பெயரை கெடு, கட்சியை உடை! ஆங்கில ஊடகங்களுக்கு பா.ஜ.க. உத்தரவு?



அ.தி.மு.க.வை பிளந்து குட்டையை குழப்ப பா.ஜ.க.முயல்கிறது என்கிற பாணியில் விடுதலை நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சசிகலா மீது தேவையில்லாமல் அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க வுக்குள் பிளவுகளை ஏற்படுத்திட, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரியும் நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த நாளேட்டில் அறிக்கை ஒன்றை கட்டுரை பாணியில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம் கூட காயவில்லை; அதற்குள் ஆரிய விஷப் பாம்புகளின் சீற்றம் ஆரம்பமாகிவிட்டது – ஆங்கில ஏடுகளின் வாயிலாக!
அறிஞர் அண்ணா கூறிய, ”சிண்டு முடிந்திடுவோய் போற்றி” என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்கின்றனர்.

சுமூகமாகவே புதிய அமைச்சரவை – பதவியேற்று விட்டது -.ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர். அவர்கள்மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூலமோ எந்த அதிருப்திக் குரலும் கிளம்பாத நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்’ செய்யத் தொடங்கிவிட்டனர்!

ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற திருமதி சசிகலாவைப்பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்!
இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள – திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பா.ஜ.க.வினரின் ‘கரிசனம்’ – அ.தி.மு.க.வின்மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது!

இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடுகார் கண்ணீர் மல்கக் கூறுகின்றார்! காவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அ.தி.மு.க. எம்.பி.,க்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ”நான் தொலைப்பேசியில் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறேன்” என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களிடம் கூறுகிறாரே, எப்படி? சசிகலாவின் தலையில் கைவைத்து ‘ஆறுதல் கூறும்’ மோடியின் நோக்கம் என்ன?’இப்படி அரசியல் களத்தில் ‘என்னா வினோதம் பாரு என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.